சினிமாவில் இன்று திரும்பிய இடமெல்லாம் இயக்குனர்கள் இருக்கிறார்கள். என்னாதான் தான் பல இயக்குனர்கள் இருந்தாலும். தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலகட்டத்தில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர் கார்த்திக் சுப்புராஜ் இவரது சொந்த ஊர் மதுரை. இன்ஜினியரிங் படிப்பை படித்துவிட்டு 2012ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய பீட்சா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.
இவர் இயக்கிய முதல் திரைப்படம் இவருக்கு பல விருதுகளை பெற்றுக் கொடுத்தது அதனால் இவர் அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பை அடைந்தார். பீட்சா திரைப்படத்தை தொடர்ந்து ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட என பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து கடைசியாக இவர் ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
ஜகமே தந்திரம் திரைப்படத்தில் தனுஷ் அவர்கள் நடித்திருப்பார் சமீபத்தில் வெளியாகிய மகான் படத்தை இயக்கியிருந்தார் இந்தத் திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இது திரைப்படத்தில் விக்ரம் மற்றும் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தில் அப்பா மகன் இருவரும் எதிரெதிராக நடித்திருந்தார்கள். மேலும் இந்த திரை படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்திருந்தார்.
மகன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அது மட்டுமில்லாமல் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் மதுவினால் ஏற்படும் பிரச்சனைகளை மிகவும் அழகாக தெளிவாக காட்டியுள்ளார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுக்கும் திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மனைவி அவர்கள் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பொதுவாக கார்த்திக் சுப்புராஜ் திரைப்படம் என்றாலே அவரது உறவினர்கள் அல்லது நெருங்கியவர்களை நடிக்க வைப்பார் அந்த வகையில் பேட்ட படத்தில் அப்பா மற்றும் மனைவி இருவரையும் ஒரு காட்சியில் நடிக்க வைத்திருந்தார் இந்நிலையில் தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் மகான் திரைப்படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மனைவி நடித்திருந்தார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தார் அந்தப் பேட்டியில் மகான் திரைப்படத்தில் என்னுடைய மனைவி நந்தினி அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அவருக்கு நடிப்பில் ஆர்வம் உள்ளது ஆனால் கிளினிக் வைத்து இருப்பதால் இதனை கவனித்துக்கொண்டு பெரிதாக எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை ஆனாலும் இந்த திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து உள்ளேன் என கூறியுள்ளார்..