முன்னாள் காதலியுடன் அடுத்த படத்தில் ஜோடி சேர்ந்த சிம்பு!! டிரைலர் விரைவில். !! வைரலாகும் புகைப்படம்.

0

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் போது எளிதில் சினிமாவிலும்,ரசிகர்கள் மத்தியிலும் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் தான் நடிகர் சிம்பு.  தனது அசத்தலான நடிப்பினால் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த இவர் ஒரு கட்டத்தில் வயதுக் கோளாறின் காரணமாக பல சர்ச்சைகளில் மாட்டிக் கொண்டார்.

அதாவது இவர் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானால் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு சொல்லும் நேரத்திற்கு செல்ல மாட்டாராம் அதோடு அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் இவரை வைத்து அந்த திரைப்படத்தை எடுத்து முடிப்பதற்குள் ஒரு வழியாகி விடுவார்களாம்.இதன் காரணமாக தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என்று அனைவரும் இவரை வைத்து திரைப்படங்கள் இயக்குவதற்கு பயந்து வந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

இவ்வாறு பிரச்சனையில் மாட்டிக் கொண்ட இவர் சிறிது காலம் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார். இந்நிலையில் மீண்டும் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் தற்பொழுது தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டு ஒரு நல்ல நடிகராக தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக இவர் நடித்திருந்த மாநாடு திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக இவர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள மகா திரைப்படம் வெளியாக உள்ளது.

இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார். இத்திரைப்படம் ஹன்சிகாவின் 50வது திரைப்படம் ஆகும் அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது அதில் கஞ்சா அடிப்பது போல இருந்ததால் பெரும் சர்ச்சையை கிளப்பியது.  இதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது முன்னால் காதலிவுடன் இணைந்து சிம்பு நடித்துள்ளதால் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வருகிறது.

maha
maha

இத்திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதால் எப்பொழுது திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று சரியான தேதி இன்னும் முடிவு எடுக்கவில்லை.  ஆனால் விரைவில் மகா திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என்று கூறி உள்ளார்கள்.வாலு திரைப்படத்திற்கு பிறகு ஹன்சிகா மற்றும் சிம்பு நடித்துள்ள இத்திரைப்படத்தின் டீசருக்கு ரசிகர்கள் ஆவலாக காத்து வருகிறார்கள்.