மேக்னாராஜ் அம்மா என்ற கூற அப்பா என கூறும் சிரஞ்சீவி சார்ஜாவின் மகன்.! வைரலாகும் வீடியோ..

மறைந்த கன்னட நடிகரான சிரஞ்சீவி சார்ஜா அவர்களுடைய மகன் சமீபகாலங்களாக வளர்ந்து வரும் நிலையில் அவரைப் பற்றிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை மேக்னாராஜ் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அதாவது பிரபல நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த 2020ஆம் ஆண்டு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் மரணமடைந்தார்.  அவருடைய மரணத்தின் போது அவருடைய மனைவி மேக்னாராஜ் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் இவர்கள் பல வருடங்கள் காதலித்து பிறகு திருமணமான நிலையில் மேக்னாராஜ் பெரிதும் அவருடைய மறைவால் பாதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிரஞ்சீவி சார்ஜா இறந்த சில மாதங்களிலேயே மேக்னாராஜ்க்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது அந்த குழந்தைக்கு ராயன்ராஜ் என்று பெயர் வைத்தார்.  அந்த வகையில் தற்பொழுது ராயன் ராட்சத இரண்டு வயதை எட்டியுள்ள நிலையில் அம்மா என்ற மேக்னாராஜ் சொல்லித் தருகிறார்.

ராயன் ராஜ் அம்மா என்று சொல்லிவிட்டு ஒரு கட்டத்திற்குப் பிறகு அப்பா என கூறுகிறார்.  மேலும் சிரஞ்சீவி சார்ஜா போலவே மேனரிசமும் செய்கிறார். இது குறித்த வீடியோவை மேக்னா ராஜ் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.  மேலும் அந்த வீடியோவிற்கு லைக்குகளும், கமெண்டுகளும் அள்ளி குவித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

Leave a Comment