ஏ கே 62 திரைப்படத்திற்கு பக்கா பிளான் போடும் மகளிர் திருமேனி.! அனுபவம் இல்லாத வேலையை செய்ய போகும் அஜித்.?

ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட் இன்னும் வெளியே வராமல் இருக்கும் நிலையில் இதற்குப் பின்னால் அறிவிக்கப்பட்டிருந்த திரைப்படங்களின் அப்டேட்டுகள் வெளியாகி கொண்டே இருக்கிறது. ஆனால் இன்று வரையிலும் ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.

இதனால் ரசிகர்களும் கொஞ்சம் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஒரு புதிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது ஏகே 62 திரைப்படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் நடிகைகள், வில்லன் நடிகர் யாரென்றே படக்குழு அறிவிக்காமல் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்துக்கு இயக்குனர் மகிழ் திருமேனி என்பது குறித்து கூட தயாரிப்பு நிறுவனம் எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடாமல் இருக்கிறது. ஆனால் மகிழ் திருமேனிதான் ஏகே 62 திரைப்படத்தை இயக்குகிறார் என்று உறுதி செய்யப்பட்ட தகவல் தான் வெளியாகியிருக்கிறது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் மகிழ் திருமேனி ஏகே 62 திரைப்படத்திற்கு பக்கா பிளான் போட்டு இருப்பதாக இணையத்தில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இப்பொழுது மகிழ் திருமேனி அவர்கள் ஏகே 62 திரைப்படத்தை முழுமையாக முடிக்க வெறும் 45 நாட்கள் மட்டும் சூட்டிங் நடத்த இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் மிகக் குறுகிய நாட்களில் எடுக்கும் அஜித்தின் முதல் திரைப்படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது அது மட்டுமல்லாமல் அஜித்திற்கு இதுவரைக்கும் இது போன்ற அனுபவம் கிடைத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முதன் முறையாக புதிய முயற்சியில் அஜித் மற்றும் மகிழ் திருமேனி இருவரும் இணைந்து இருக்கிறார்கள்.

விரைவில் ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் ஏகே 62 திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே ஏகே 63 திரைப்படத்தின் தகவல்கள் இணையத்தில் வைரளாகி வருகிறது. விரைவில் ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது.

Leave a Comment