அம்மா கரடி போல் மாறிய மகத் மனைவி : கொண்டாட்டத்தில் நடிகர்.! வைரலாகும் புகைப்படம்.

திரையுலகில் புதுமுக நடிகர்கள் தனது சினிமா பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர் சொல்லிக்கொள்ளும்படி அவர்கள் வெற்றியைப் பெறாவிட்டாலும் நல்லதொரு பட வாய்ப்பிற்காக பொறுமை காத்து வருகின்றனர் அவர்களில் ஒருவராக தற்பொழுது காத்து கிடப்பது தான் நடிகர் மகத்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரை படத்தில் வில்லன் காமெடி போன்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு நல்ல விருந்து கொடுத்தவர் நடிகர் மகத். அஜித் படத்தில் நடித்ததால் இவருக்கு நல்லதொரு வரவேற்பு சினிமா உலகில் கிடைத்தது.

அதன் பிறகு சிம்புவுடன் இணைந்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற திரைப்படத்தில் அவருக்கு நண்பனாக நடித்து பட்டி தொட்டியெங்கும் தன்னை  பிரபலப்படுத்திக் கொண்டார் மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மகத்துக்கு மேலும் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் சினிமாவில் மட்டும் அவருக்கு வெற்றியை சமீபகாலமாக கிடைத்தால் ஏங்கி கொண்டிருக்கிறார் இது இப்படி இருக்க மகத் பிரபல மாடல் அழகியான மிஸ்ராவை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்கள் இருவருக்கும் ஒரு நல்ல செய்தி வந்துள்ளது அது என்னவென்றால் தற்போது கர்ப்பமாக உள்ளார் மிஸ்ரா இவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவில் மிஸ்ரா கூறியது.

தான் பார்ப்பதற்கு அம்மா கரடி போல் இருப்பதாகவும் இந்த நிகழ்வு தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் உண்மையிலேயே மிகவும் பாசிடிவ் ஆக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment