என்னை அறிந்தாளை மிஞ்சிய மாஃபியா.! இதோ திரைவிமர்சனம்.!

அருண் விஜய் என்ன தான் சினிமா பின்புலத்தில் இருந்து வந்திருந்தாலும் அவர் தனது அயராத உழைப்பால் மிகவும் கடினப்பட்டு தனக்கான இடத்தை பிடித்துவிட்டார். அதனால் மீண்டும் கீழே இறங்கி விடக்கூடாது என்பதில் முழு கவனத்தில் இருக்கிறார். அதனால் இவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் அனைத்தும் மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். இந்த நிலையில் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் நரேனுடன் கைகோர்த்த அருண்விஜய் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டாரா என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

படத்தின் கதை

அருண்விஜய் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் பணிபுரிந்து வருகிறார் அவருடைய டீமில் பிரியா பவானி சங்கர் மற்றும் ஒரு இளைஞர் இருக்கிறார்.போதைப் பொருள் அதிகமாக கல்லூரி மாணவர்கள் பயன் படுத்துகிறார்கள் என்பதை கண்டு பிடிக்கிறார்கள். இதையெல்லாம் யார் செய்கிறார் என்று அலசிப் பார்த்தால் பிரசன்னாதான் செய்கிறார். பிரசன்னா தான் போதைப் பொருள் சப்ளை செய்கிறார் என்பதை இரண்டு பேருக்கு மட்டும் தெரியவர அவர்களை போட்டு தள்ளுகிறார் பிரசன்னா.

பின்பு அருண் விஜய் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார் பின்பு ஒரு ஆர்டர் கிடைக்கிறது அதை வைத்து எப்படியாவது பிரசன்னாவை வெளியே கொண்டு வந்து விடலாம் என மாஸ்டர் பிளான் போட்டு முடிவுக்கு வருகிறார், ஆனால் பிரசன்னா அருண் விஜய் குடும்பத்தையே தூக்கி விடுகிறார் பிறகு அருண்விஜய் பிரசன்னாவை தேடி செல்கிறார் அதன்பின் என்ன ஆனது என்பது தான் கதை.

படத்தைப் பற்றி

அருண் விஜய் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது உடலை பிட்டாக வைத்துக் கொள்வார்.அதனால் தான் அவர் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது அந்த நிலையில் போலீஸ் கதாபாத்திரத்திற்காக தோற்றம் நடிப்பு என அசத்தலாக தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

என்னை அறிந்தால் திரைப்படத்திலிருந்து இதுவரைக்கும் நடித்த திரைப்படங்களில் அருண் விஜய் தனக்கான கதாபாத்திரத்தை மிகவும் கச்சிதமாக நடித்துள்ளார். ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும் அதேபோல் அருண் விஜய்யும் தனக்கான ஸ்டைலில் நடித்துள்ளார்.

அதேபோல் நடிகை பிரியா பவானி சங்கர் அருண்விஜயின் உதவியாளராக வருகிறார் அவரை காதலிப்பது போலவும் காட்டுகிறார்கள். சண்டை காட்சி மற்றும் கன்சூட் என தனது அசால்ட்டான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அதேபோல் கார்த்திக் நரேன் தனது முதல் திரைப்படத்தில் வித்தியாசமான திரைக்கதையை வெளிப்படுத்தி கிளைமாக்ஸ் காட்சிகள் என ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதே எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இந்த திரைப்படத்தையும் காண சென்றுள்ளார்கள். படம் ஆரம்பித்ததும் போதை மருந்து பயன்படுத்துபவர்கள் குறித்து ஒரு விளக்கம் கொடுக்க அடடா படம் ஆகா ஓகோ என்று இருக்கும் என சீட்டின் நுனிக்கே வருகிறார்கள் ரசிகர்கள். ஆனால் படம் ஆரம்பித்ததில் முதல்பாதியில் வரும் காட்சிகள் அனைத்தும் எந்த ஒரு சுவாரஸ்யமான திருப்பத்தையும் ஏற்படுத்தவில்லை. கொஞ்சம் மைனஸ் தான் அதுவும் வில்லன் பிரசன்னாவுக்கு வெறும் பில்டப் மட்டும்தான் இருக்கிறது.

முதல் பாதி மெதுவாகச் சென்றாலும் இரண்டாம் பாதி மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது. அதுவும் அருண்விஜய் பிரியா மற்றும் ஒரு அதிகாரி மூன்று பேரை வைத்து பிரசன்னா கும்பலை பிடிக்க மாஸ்டர் பிளான் போடுகிறார்கள் பின்பு கிளைமாக்சில் அடித்து துவம்சம் செய்கிறார்கள்.

அட என்னப்பா பணம் அவ்வளவு தானா என நினைத்தால் கார்த்திக் நரேன் தனது ஸ்டைலில் அடுத்த பாகத்திற்காக எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார். படத்தில் ஒளிப்பதிவு செம ஸ்டைலிஷாக எடுத்துள்ளார்கள் குறிப்பாக துப்பாக்கியிலிருந்து புல்லட் வெளிவருவது ரத்தம் தெரிப்பது என அனைத்தும் தத்துரூபமாக காட்சிகள் இருக்கிறது. ஜாக்ஸ் பேஜய் இசை படத்துக்கு பலம் சேர்த்தாலும் சில இடங்களில் இரைச்சல் அதிகமாக இருக்கிறது.

படத்தின் முதல் பாதி மெதுவாக சென்றாலும் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. மாபியா மீண்டும் விரைவில்.

மாஃபியா = 2.75/5

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment