முதல்நாளே பாக்ஸ் ஆபீசை தெரிக்கவிட்ட மாபியா.! வசூலை கேட்டு அதிரும் ஹோலிவுட்.

தமிழ்சினிமாவில் நடிகர்களின் வாரிசு அடுத்தடுத்து சினிமாவில் கால் தடம் பதித்து வருகிறார்கள், ஆனால் அவர்கள் அனைவரும் சினிமாவில் வெற்றி பெறுகிறார்களா என்றால் மிக மிக குறைவு தான் ஆனால் ஒரு சில நடிகர்கள் தனது திறமையால் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறார்கள்.

அந்த வகையில் நடிகர் அருண் விஜய் சினிமா பின்புலத்தில் இருந்து வந்திருந்தாலும் தனது அயராத உழைப்பால் சினிமாவில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இவர் சமீபகாலமாக நடித்து வரும் திரைப்படங்கள் அனைத்தும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்கள் தான். இவர் அஜித்துடன் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.

அருண் விஜய் என்று கூப்பிட வதை விட விக்டர் என்று கூப்பிட்டால் ரசிகர்களுக்கும் ஒரே குஷிதான் ஏனென்றால் என்னை அறிந்தால் திரை படத்தில் அருண் விஜய்யின் கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. இந்த நிலையில் தற்போது இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் மாபியா இந்த திரைப்படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.

mafia
mafia

மாஃபிய திரைப்படம் வெளியாகி முதல் நாள் தமிழ்நாடு வசூல் இரண்டரை கோடி வசூலாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அருண் விஜய் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி மாபியா படம் ரசிகர்களிடம்  மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது, இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக வெளியாகும் என படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கார்த்திக் நரேன் ஒரு டிவிஸ்ட் வைத்திருந்தார்.

இந்த நிலையில் மாஃபியா திரைப்படம் சென்னையில் மட்டும் 43 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளன, அதனால் அருண் விஜய்யின் சம்பளம் அடுத்த திரைப்படத்திலிருந்து அதிகரித்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது, அடுத்த திரைப்படத்திலிருந்து அருண்விஜய் கோடிகளில் புரள போகிறார் என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகிறார்கள்.

Leave a Comment