தோல்வியில் இருந்து மீளுவது எப்படி என்று இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.! பிரியா பவானி ஷங்கர் அதிரடி பேச்சு

துருவங்கள் 16 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இதை தொடர்ந்து அவர் மாபியா படத்தை இயக்கியுள்ள இப்படத்தில் அருண் விஜய் மற்றும் பிரசன்னா, பிரியா பவானி சங்கர் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் டீசர் இணையதளத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது இந்த நிலையில் இப்படம் வரும் வெள்ளிக்கிழமை அன்று வெளியாக உள்ளது. இதனையொட்டி படக்குழு ஊடகங்கள் முன்பு பேட்டி அளித்தது.

கார்த்திக் நரேன் அவர்கள் கூறியதாவது நான் மாபியா படத்தின் கதையை எழுதிய போது எனக்கு அருண் விஜய் மற்றும் பிரசன்னா இவர்கள் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்திருந்த நிலையில் இப்படத்தை இவர்களே நடித்தது எனக்கு மிக ஆச்சரியமாக உள்ளது என கூறியிருந்தார். இவர்கள் இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் அதிலும் குறிப்பாக பிரசன்னா அவர்கள் வில்லன் வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார் அவர் இப்படத்தின் மூலம் தனி ஒரு இடத்தைப் பிடிப்பார் என இயக்குனர் கார்த்திக் நரேன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

இதைப்போல ப்ரியா பவானி சங்கர் அவர்களும் மாறுபட்ட வேடத்தில் தனது சிறப்பான ரோலை நடித்திருந்தார். இதை போன்ற மற்ற கேமராமேன் இசையமைப்பாளர் போன்ற எல்லோரையும் அவர் வாழ்த்தியுள்ளார். இப்படம் வெறும்  33 நாட்களில் எடுக்கப்பட்டது இது அப்படக்குழுவின்  ஒத்துழைப்பு இல்லாமல் எடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்திருந்தார். இப்படம் 21ஆம் தேதி வெளியாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அருண் விஜய் கூறியதாவது இந்த வருடத்தில் தனக்கு முதல் படம் மாபியா. இப்படத்தில் அவர் என்னை எப்படி காட்டப் போகிறார்கள் என்று ஆர்வத்துடன் இருந்தேன் சிறப்பாக என்னை காட்டியுள்ளார் அதுமட்டுமில்லாமல் ஒரு படத்தை குறுகிய காலத்தில் எடுப்பதற்கு உதவியாக இருந்தது லைக்கா நிறுவனம் அதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார், அது மட்டுமில்லாமல் பல முன்னணி பிரபலங்கள் மற்றும் இப்படத்தில் உதவியவர்களுக்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நடிகை பிரியா பவானி சங்கர் கூறியதாவது மாபியா எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். நிறைய நண்பர்கள் என் வாழ்வில் தந்த திரைப்படம். ஜேக்ஸ் இசை எனக்கு ரொம்ப பிடிக்கும் அருண் விஜய் மற்றும் பிரசன்னா திரையில் வந்தாலே அவரது திறமைகள் தனியாக வெளிப்படும் மற்றும் கார்த்திக் தனக்கு என்ன தேவை என்பதை தெரிந்து வேலை செய்யும் மனிதர் என்று பவானி சங்கர் அவர்கள் கூறியுள்ளார். அருண் விஜய் அவர்கள் தோல்வியில் இருந்து எப்படி மீண்டு வருவது என்பது பற்றி நிறைய கற்றுத் தந்துள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரசன்னா அவர்கள் கூறியது இந்த மேடையில் நன்றி அறிவிப்பு கூட்டம் மாதிரி ஆகிவிட்டது இந்த படம் வெற்றி பெறும் என அனைவர் மனதிலும் பதிந்தார் எல்லோரும் நன்றி கூறுகிறார்கள். தமிழ் சினிமாவில் சொன்ன நேரத்தில் சொன்ன பட்ஜெட்டில் முடிக்கக்கூடிய இயக்குனர்கள் ஒருசிலரே அவற்றுள் கார்த்திக் சார் நபர்களும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழ் சினிமாவில் நிறைய தூரம் பயணம் செய்வார் எனவும் பிரசன்னா அவர்கள் கூறியிருந்தார். அது மட்டுமில்லாமல் பிரியா பவானி சங்கர் அவர்கள் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அருண் பற்றி பிரியா அழகாகவே தோல்வியில் இருந்து மீண்டு எழுவது எப்படி என்று இவரிடம் கற்றுக்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment