‘மாஃபியா’ படத்தில் அருண் விஜய் கெட்டப்பை விட மரண மாஸாக இருக்கும் பிரசன்னா கெட்டப்.! வைரலாகும் புகைப்படங்கள்

0
mafia
mafia

துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார் கார்த்திக் நரேன், இதனைத் தொடர்ந்து அடுத்ததாக நராகசுரன் திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் படப்பிடிப்பு முடிந்ததே தவிர இன்னும் திரைக்கு வரவில்லை, ஏனென்றால் சில சிக்கலை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் கார்த்திக் நரேன்  நாடக மேடை என்ற திரைப்படத்தை இயக்கப்போவதாக அறிவிப்பை வெளியிட்டார் ஆனால் அதன் பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை, இந்த நிலையில் இதனைத் தொடர்ந்து  மாஃபியா திரைப்படத்தை இயக்க இருக்கிறார், இந்த திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்,

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசை. கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் செய்ய இருக்கிறார்.  சமிபத்தில் அருண் விஜயின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.Prasanna

அதேபோல் தற்பொழுது அருண் விஜய் கெட்டப்பை விட மாஸாக இருக்கும் பிரசன்னாவின் சூட்டிங் ஸ்பாட் போட்டோ ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது, இதை அனைத்து ரசிகர்களும் ஷேர் செய்து வருகிறார்கள்.