வசூலில் மிரட்டிய மாஃபியா.! வெற்றிக்கனியை ருசிக்க இன்னும் எத்தனை கோடி வேண்டும்.? இதோ மூன்றாவது நாள் வசூல் நிலவரம்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் கடந்த வெள்ளிகிழமை வெளியாகிய திரைப்படம் மாபியா. அருண் விஜய் திரைப்படம் என்றாலே ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வரும் அவர் இந்த முறை கார்த்திக் நரேனுடன் அருண்விஜய் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறிக் கிடந்தது.

ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகிய மாபியா திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.இருந்தாலும் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது அதனால் முதல் நாள் வசூலே இரண்டரை கோடி மேல் வசூல் வேட்டை நடத்தியது.

அருண் விஜய் நடித்த திரைப்படங்களிலேயே மாபியா திரைப்படத்திற்கு தான் நல்ல ஓபனிங் என பலரும் கூறுகிறார்கள். இந்த நிலையில் மாஃபியா திரைப்படம் தமிழகத்தில் மட்டும் மூன்று நாட்கள் முடிவில் 7 கோடி வரை வசூல் வேட்டை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

mafia
mafia

இந்த நிலையில் சென்னையில் மட்டும் இதுவரை 1.2 கோடி வரை வசூல் செய்துள்ளது இது அருண்விஜய் திரைப்பயணத்தில் நல்ல ஒரு திருப்புமுனையாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மாபியா திரைப்படம் இதுவரை வெளியாகிய அருண்விஜய் திரைப்படத்திலேயே நல்ல ஓப்பனிங் பெற்ற திரைப் படமாக அமைந்துள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment