மிரட்டலான மாஃபியா ஸ்னீக் பீக் வீடியோ.! மாஸ் காட்டும் அருண் விஜய்.! வீடியோ உள்ளே

துருவங்கள் 16 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இதை தொடர்ந்து அவர் மாபியா படத்தை இயக்கியுள்ள இப்படத்தில் அருண் விஜய் மற்றும் பிரசன்னா, பிரியா பவானி சங்கர் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் டீசர் இணையதளத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது இந்த நிலையில் இப்படம் வரும் வெள்ளிக்கிழமை அன்று வெளியாக உள்ளது.

கார்த்திக் அவர்கள் கூறியதாவது நான் மாபியா படத்தின் கதையை எழுதிய போது எனக்கு அருண் விஜய் மற்றும் பிரசன்னா இவர்கள் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்திருந்த நிலையில் இப்படத்தில் இவர்களே நடித்தது எனக்கு மிக ஆச்சரியமாக உள்ளது என கூறியிருந்தார்.

இவர்கள் இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் அதிலும் குறிப்பாக பிரசன்னா அவர்கள் வில்லன் வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார் அவர் இப்படத்தின் மூலம் தனி ஒரு இடத்தைப் பிடிப்பார் என இயக்குனர் கார்த்திக் நரேன் அவர்கள் தெரிவித்திருந்தார். அதேப்போல ப்ரியா பவானி சங்கர் அவர்களும் மாறுபட்ட வேடத்தில் தனது சிறப்பான ரோலை நடித்திருந்தார்.

இதை போன்ற மற்ற கேமராமேன் இசையமைப்பாளர் போன்ற எல்லோரையும் அவர் வாழ்த்தியுள்ளார். இப்படம் வெறும் 33 நாட்களில் எடுக்கப் பட்டது இது அப்படக்குழு ஒத்துழைப்பு இல்லாமல் எடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்திருந்தார். இப்படம் 21ஆம் தேதி வெளியாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தநிலையில் தற்பொழுது சினி பீக் வெளியாகியுள்ளது.

Leave a Comment