நடிகர் அருண் விஜய் சமீப காலமாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், இவர் கடைசியாக நடித்த திரைப்படம் தடம் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து அக்னி சிறகுகள் என்ற திரைப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடித்து வருகிறார், அதுமட்டுமில்லாமல் பாகுபலி பிரபலம் பிரபாஸுடன் சாஹோ திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் boxer என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார், கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் பெயரிடப்படாத படத்திலும் நடிக்க இருக்கிறார்.
‘துருவங்கள் பதினாறு’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்திலும் நடிக்கிறார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக திரில்லர் கதையாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு மாபியா என பெயரிட்டுள்ளார்கள், இதன் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது படத்தை லைக்கா நிறுவனம் விரைவில் தயாரிக்க இருக்கிறது.
First look of Arun Vijay, Prasanna, Priya Bhavani Shankar starrer #Mafia directed by Karthick Naren and produced by Lyca Productions.
Music by Jakes Bejoy. pic.twitter.com/ckhu0UQ2mi
— Christopher Kanagaraj (@Chrissuccess) July 2, 2019