மதுரையில் ரயிலுக்கு இடையே சிக்கிய பெண் உயிருடன் மீட்பு.! வைரலாகும் வீடியோ

0
train
train

மதுரை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடைமேடையில் பெண்ணொருவர் சிக்கிக்கொண்டு நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மீட்டார்கள் அவர் தூக்க கலக்கத்தில் விழுந்துவிட்டதாக ரயில்வே போலீசார் அறிவித்துள்ளார்கள்.

சென்னை எக்மோரில் இருந்து கேரளா திருவனந்தபுரத்திற்கு செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் கிளம்பியது அப்போது பூர்ணிமா என்ற பெண் அந்த ரயிலில்  பயணித்தார், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் அதிகாலை நாலரை மணிக்கு மதுரையில் சென்றடைந்த பொழுது மதுரையில் இறங்கிய பூர்ணிமா தூக்க கலக்கத்தில் நடைமேடையில் கால் வைப்பதற்கு பதிலாக ரயிலுக்கும்   நடைமேடை க்கும் இடையில் காலை விட்டுவிட்டார்.

அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் அனைவரும் கத்தியதால் ரயில்வே போலீசார் விரைந்து வந்து பூர்ணிமாவை வெளியே எடுக்க  முயற்சித்தார்கள், ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு பூர்ணிமாவை மீட்டு விட்டார்கள், மீக்கப்பட்ட பெண்ணிற்கு உடலில் காயம் ஏற்பட்டதால் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் இந்த சம்பவத்தால் மதுரை ரயில்வே நிலையத்தில் இருந்த மக்கள் அனைவரும் பரபரப்படைந்தார்கள்..