டெல்லியில் சில நாட்களுக்கு முன்பாக 62வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வந்தது அந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் விஜய் சேதுபதி பார்த்திபன் போன்ற பல்வேறு நடிகர்களும் கலந்து கொண்டார்கள்.
இவ்வாறு பிரபல நடிகராக விளங்கும் இவர்கள் விருது வாங்கிய அதே மேடையில் ஒரு சிறிய பையன் விருது வாங்கி உள்ளார் அவர் யார் என்று தெரியுமா அந்த பையன் வேறு யாரும் கிடையாது கேடி கருப்பு துரை திரைபடத்தில் நடித்த சிறுவன் தான் இவருடைய பெயர் நாகா விஷால்.
இவர் நடித்த கேடி திரைப்படத்தை மதுமிதா என்ற இயக்குனர் தான் இயக்கியிருந்தார் மேலும் இந்த திரைப்படத்தில் சரிகமா சார்பில் விக்ரம் சித்தார்த் ஆனந்த் குமார் ஆகியோர்கள் தயாரித்துள்ளார். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது ரசிகர் மனதில் நல்ல இடம் கிடைப்பது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனத்தையும் பெற்றிருந்தது.
அந்தவகையில் இந்த திரைப்படத்திற்கு தேசிய விருது விஷாலுக்கு கொடுத்துள்ளார்கள் இவ்வாறு அவர் விருது வாங்கிய புகைப்படமானது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது மட்டுமல்லாமல் பல்வேறு ரசிகர்களும் இவருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் நகாவிஷால் மதுரை அண்ணாநகர் பகுதியில் வசித்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் அவர் தற்போது ஒன்பதாம் வகுப்பு தான் படித்து வருகிறாராம் இந்நிலையில் இவருடைய நடிப்பை பார்த்து பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வரும் வகையில் நாகா விஷால் இந்த திரைப்படம் வெளியான போது சிலர்தான் என்னை பாராட்டினார்கள் ஆனால் தற்போது பலரும் பாராட்டி வருகிறார்கள் இது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் இவர் விருது வாங்கிய மேடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனுஷ் என பெரிய பிரபலங்கள் விருது வாங்கிய நிலையில் தற்போது இவரும் அதே மேடையில் விருது வாங்கியது பெருமைக்குரிய விஷயமாக அமைந்தது.