காலா பட நடிகையுடன் கூட்டணி சேரும் மெட்ராஸ் புகழ் கலையரசன்.!! என்ன படம்னு பாருங்க.

0

தமிழ் சினிமாவிற்கு மெட்ராஸ் என்ற திரைப்படத்தின் மூலம் துணை நடிகராக அறிமுகமானவர் கலையரசன். இவர் அதனை தொடர்ந்து ராஜா மந்திரி, டார்லிங் 2 போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் இவர் பிரபல இயக்குனர் மிஸ்கின் மற்றும் பா ரஞ்சித் ஆகியோரின் படங்களில் அதிகம் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் குதிரைவால் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த படம் முற்றிலும் மாறுபட்ட கதையை கொண்ட படமாக உருவாக உள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனரான மனோஜ் லியோனஸ் ஜான்சன் மற்றும் ஷாம் சுந்தர் இணைந்து இயக்க இருக்கிறார்கள் .

இந்த படம் யாழி பிலிம்ஸ் சார்பில் விக்னேஷ் சுந்தரேசன் தயாரித்திருக்கும் இப்படத்தை நீலம் புரோடக்சன்ஸ் சார்பில் ரஞ்சித் வெளியிட இருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்திற்கு கதை, வசனம் ராஜேஷ் எழுதியிருக்கிறார்.

இந்தப்படத்தின்  கதாநாயகியாக காலா படத்தில் கலையரசனுடன் இணைந்து நடித்த அஞ்சலி பாட்டிஸ் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக பிரதீப் மற்றும் மார்ட்டின் விசர் பணியாற்ற உள்ளார்கள். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

anjali pattis
anjali pattis