குடி, கும்மாளம்.! இரவு விடுதி அழகிகள், ஒரே ஒரு இரவுக்கு 8 கோடி செலவு செய்த முதலமைச்சரின் உறவுக்காரர்.!

0
night party
night party

வங்கி கடன் மோசடியில் மத்திய பிரதேச முதல்வரின் உறவினர் அமெரிக்க விடுதி ஒன்றில் ஒரே நாளில் 8 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

வங்கி கடன் மோசடியில் காங்கிரஸ் கட்சித் தலைவரின் மூத்த தலைவரும் மத்திய பிரதேசத்தின் முதல்வருமான கமல்நாத் சகோதரி மகன் ரதுல் பூரி 354 கோடி வங்கிக்கடன் மோசடியில் கைது செய்யப்பட்டார், மோசர் பேர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் செயல் அதிகாரியாக இருந்தபோது இவரும் இவருடன் இணைந்து சில இயக்குனர்களும் சேர்ந்த போலி ஆவணங்கள் மூலம் 354 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து இவர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றது அதே சமயம் ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்தது ரதுல் பூரியை . இதனைத்தொடர்ந்து அமலாக்கத்துறை மேற்கொண்ட விசாரணையில் மோசடி  செய்த பணத்தில் வெளிநாடுகளுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தது தெரியவந்துள்ளது, மேலும் அமெரிக்கா விடுதியில் ஒரே இரவில் 8 கோடி ரூபாய் ஆடம்பரமாக செலவழித்து உள்ளார்கள் என்பது வெளியாகியுள்ளது.

மேலும் 2011 முதல் 2016 வரை ரதுல்பூரியின் தனிப்பட்ட செலவு மட்டுமே 32 கோடி ரூபாய் என குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார்கள், அதுமட்டுமில்லாமல் ரதுல் பூரியின் மொத்த வங்கி கடன் மோசடி எட்டாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன, நிதி மோசடி செய்ய ஏதுவாக துணை நிறுவனங்களை உருவாக்கி அதில் மோசர் பேர்நிறுவனம் 8,000 கோடி ரூபாய் முதலீடு செய்து மோசடி செய்துள்ளதாக அமலாக்கத்துறை 100 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.