பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறத் துடிக்கும் பிரபல நடிகை.! கண்ணீருடன் தனிமையில்

0
bigg-boss-tamil
bigg-boss-tamil

பிக் பாஸ் வீட்டில் இரண்டு நாட்களாக பிரச்சினைக்கு மேல் பிரச்சினை போய்க்கொண்டே இருக்கிறது, கமல் இருக்கும் பொழுது மதுமிதா தமிழ் பெண் தமிழ் கலாச்சாரம் என பேசியது மற்ற போட்டியாளர்களை கடுப்பாகி உள்ளது அதனால் பிக் பாஸ் போட்டியாளர்கள் பலர் மதுமிதாவை நாமினேஷனில் கூறியுள்ளார்கள்.

இதனால் மதுமிதா விடமிருந்து அனைவரும் ஒதுங்கியே இருக்கிறார்கள், அதனால் மதுமிதா நேற்று தனிமையில் ஒரு சிவலிங்கத்தை வைத்து கொண்டு பேசிக் கொண்டிருந்தார் அவர் பேசியதாவது ‘ இன்னைக்கு நீ என் கனவுல வரியா? ஏதாவது ஒரு விஷயம் எனக்கு தெரியணும் நீ தப்புன்னு சொன்னாலும் ஏற்றுக் கொள்வேன் சரி என்று சொன்னாலும் ஏற்றுக்கொள்வேன் எனக் கூறினார்.

மேலும் என் மனசுல பெரிய கல்லை தூக்கி வைத்தது போல் வெயிட்டாக இருக்கிறது வீட்டில் பிரச்சனை என்றால் பரவாயில்லை வீடே இங்கு பிரச்சினையாக இருக்கிறது, என கண்ணீருடன் பேசியுள்ளார் இந்த நிலைமை இப்படியே சென்றால் மதுமிதா கூடிய விரைவில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முடிவை எடுத்து விடுவார் என தெளிவாக தெரிகிறது.

madhu
madhu