உலகம் முழுவதும் தந்தையர் தினத்தை கொண்டாடி வரும் நிலையில் நடிகை மதுபாலாவின் மகள்கள் தனது தந்தைக்கு வாழ்த்து புதிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்கள். அந்தப் புகைப்படத்தினை மதுபாலா தனது இன்ஸ்டாகிராம் பதிவு செய்துள்ளார்.
நடிகை மதுபாலா தற்போதெல்லாம் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் இன்றும் பிரபலமாக இருந்து வருகிறது. தான் நடித்த ஒரு சில திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.
இவர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த அழகன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு மணிரத்னம் இயக்கிய ரோஜா, ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன் உள்ளிட்ட இன்னும் பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
இந்நிலையில் பெரிதாக சினிமாவில் ஈடுபடாமல் இருந்து வரும் இவர் கடந்த ஆண்டு வெளியான தலைவி திரைப்படத்தில் ஜானகி ராமச்சந்திரன் கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் நடிக்கவில்லை என்றாலும் கன்னட, மலையாள, தெலுங்கு போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

நடிகை மதுபாலா கடந்த 1999ஆம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அமையா, கெயா என இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் மதுபாலா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து வெளியீட்டு நிகழ்வும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.

அந்த வகையில் சற்று முன் தனது மகள்கள் இருவரும் தங்கள் தந்தைக்கு தந்தையர் தின வாழ்த்துக்களை கூறிய புகைப்படத்தை மதுபாலா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் நடிகை மதுபாலா இவ்வளவு பெரிய மகள்கள். விரைவில் இவர்களை ஹீரோயின்களாக பார்க்கலாமா? என்ற கமெண்ட் செய்து வருகிறார்கள்.