சைலண்டாக விஜய்யை எதிர்த்து மோதும் மாதவனின் பான் இந்திய திரைப்படம்.! எது தெரியுமா.?

சினிமா உலகில் இருக்கும் டாப் நடிகர் படங்கள் சமீபகாலமாக அதன் சொந்த மொழியையும் தாண்டி இந்திய அளவில் அதாவது ஒரு பான் இந்தியப் படமாக கொடுத்து அசத்துகின்றனர். அந்த படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை வேட்டைக்கும் நன்றாக பெற்று அசத்துகின்றன.

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து பல்வேறு நடிகர்கள் படங்கள் பெரும்பாலும் பான் இந்திய மூவி படங்களாக இருகின்றன இதற்கும் ஒரு தகுதி இருக்கிறது அதாவது அந்த திரைப்படம் அதிக பொருட் செலவில் 100 கோடிக்கு மேல் எடுத்திருக்க வேண்டும் மற்ற மொழிகளில் பிரபலமாக இருக்கும் முன்னணி நடிகர்கள் மற்றும் வரலாற்று சம்பந்தப்பட்ட நிகழ்வு அல்லது ஒரு சமூகப் பிரச்சனையை மையப்படுத்தி இருக்க வேண்டும்.

மேலும் இந்தத் திரைப்படங்களில் இந்தியா முழுவதும் அனைத்து மொழிகளிலும் திரையிடப்படும் பாகுபலி படத்திற்கு பிறகு நிறைய திரைப்படங்கள் வெளியாகி உள்ளன அந்த வகையில் கேஜிஎப் திரைப்படம் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இப்போ kgf இரண்டாம் பாகம் கூட ஏப்ரல் 14 இல் வெளிவர இருக்கிறது இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் மாதவன்  நடித்துள்ள திரைப்படம் ராக்கெட்டரி.

இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டு எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் இஸ்ரோ நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மாதவன் மற்றும் சிம்ரனும் நடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகிறது ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்திய பான் படங்களான கே ஜி எஃப், ராக்கெட்டரி.

இதே ஏப்ரல் மாதத்தில் பீஸ்ட திரைப்படமும் வெளியாகிறது ஆனால் பீஸ்ட் திரைப்படம் பான் இந்திய படம் கிடையாது. நடிகர் மாதவன் சைலண்டாக இருந்துகொண்டு விஜய்யின் பீஸ்ட் படத்தை  ஓவர்டேக்  செய்து இந்திய அளவில் படத்தை ரிலீஸ் செய்வது மிகப் பெரிய ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது

Leave a Comment