மாதவன் சினிமா.. அவரது மகன் வேற ரூட்.. விருதுகளை அள்ளி புதிய சாதனை.! எதில் தெரியுமா.? வாழ்த்தும் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என அழைக்கப்பட்டவர் நடிகர் மாதவன் அந்த அளவிற்கு காதல் கதாபாத்திரங்களில் மிக சூப்பராக நடித்து ரசிகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் குடியேறினார் ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தாலும் நடிகர் மாதவன் ஒரு கட்டத்தில் ஆக்ஷன் படங்களில் நடித்தார்.

அவருக்கு ஆரம்பத்தில் கை கொடுத்தாலும் ஒரு சமயத்தில் பெரிய அளவு வெற்றி பெறாததால் தமிழ் தாண்டி ஹிந்து பக்கம் படையெடுத்தார் அங்கு ஓரளவு டாப் நடிகர்கள் படங்களில் முக்கிய ரோல் மற்றும்  கெஸ்ட் ரோலில் நடித்து வந்த இவர் பல வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம்   ரீஎன்ட்ரி கொடுத்தார் அந்த படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவின் சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். விக்ரம் வேதா படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது சோலோவாக படங்களில் நடிக்கிறார் அந்த வகையில் இவரே இயக்கி நடித்துள்ள  ராக்கெட்ரி நம்பி வளைவு திரைப்படம் வெகுவிரைவிலேயே திரையரங்குகளில் வெளிவரவிருக்கின்றது.

சினிமா உலகில் இப்படி மாதவன் ஓடிக்கொண்டிருக்கிறார்.  இவரது மகன் வேதாந்த் சத்தமே இல்லாமல் ஒரு இந்திய நீச்சல் வீரராக இருந்து கொண்டு இதுவரை பல போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம், விருதுகளை அள்ளி உள்ளார்.

சமீபத்தில்கூட 42வது ஜூனியர் நேஷனல் aquatic சாம்பியன்ஷிப் 2021 நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு 7 பதக்கங்களை அள்ளி உள்ளார் இச்செய்தியை அறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் மாதவன் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment