மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கும் மாதவன்.! படத்தின் டைட்டிலே செம்ம மாஸா இருக்கே

0
mara
mara

தமிழில் முன்னணி நடிகராக இருந்தவர் மாதவன், இவரை அனைவரும் சாக்லேட் பாய் என்று தான் அழைத்தார்கள், அதேபோல் இவர் நடிப்பில் முன்பு பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன ஆனால் மாதவன் என்றாலே பலருக்கு அலைபாயுதே படம் தான் நினைவுக்கு வரும்.

இவர் தமிழில் கடைசியாக நடித்த திரைப்படம் விக்ரம் வேதா, அதன் பிறகு தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார், இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் துல்கர் சல்மான் பார்வதி நடிப்பில் வெளியான சார்லி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார்.

2017 க்கு பிறகு தமிழில் நடிக்கும் திரைப்படம் ஆகும் இந்த திரைப்படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது, இத்திரைப்படத்திற்கு மாறா என டைட்டில் வைத்துள்ளார்கள் இவருக்கு ஜோடியாக ஷரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார், இந்த திரைப்படத்தை இயக்குனர் திலீப் தான் இயக்க இருக்கிறார் அவர் இயக்கும் முதல் திரைப்படமாகும்.