ஆர்யாவின் மதராசப்பட்டினம் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? இவங்களே நடிச்சிருக்கலாமே என ஏங்கும் ரசிகர்கள்.!

2010ஆம் ஆண்டு ஏ எல் விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி திரைபடம் மதராசபட்டினம் இந்த திரைப் படத்தில் ஆர்யாவுடன் இணைந்து எமி ஜாக்சன் நடித்து இருந்தார் அது மட்டுமில்லாமல் பல முக்கிய பிரபலங்கள் நடித்து வெளியாகிய திரைப்படம்.

நடிகை எமி ஜாக்சனுக்கு இதுதான் முதல் திரைப்படம் இதற்கு முன் அவர் மாடலாக இருந்தார், தமிழில் முதன்முதலாக அறிமுகமானாலும் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார் இதனைத்தொடர்ந்து தாண்டவம் தெரி, ஐ, 2.0  என பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து வந்தார்.

வந்த வேகத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்தால் இவர் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டவர் ஆனால் இவரின் துரதிருஷ்டவம் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. அதனால் மீண்டும் தனது சொந்த நாட்டிற்கு சென்றார் தற்பொழுது இவர் திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தையும் பெற்றெடுத்துள்ளார்.

இந்த நிலையில் மதராசப்பட்டினம் திரை படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது தற்போது வெளியாகியுள்ளது, மதராசப்பட்டினம் திரை படத்தில் எமிஜக்சன் நடிப்பதற்கு முன்பே இந்த திரைப்படத்தில் உலகம் முழுவதும் புகழ் பெற்ற பேட் பாய்ஸ் பார் லைஃப் என்ற திரைப்படத்தின் நாயகி வனிஷா ஹுட்ஜென்ஸ்’ (vanessa hudgens) என்ற நடிகைதான் மதராசப்பட்டினம் திரைப்படத்தில் நாயகியாக நடிக்க கேட்டாராம் ஏ.எல் விஜய்.

ஆனால் அவருடைய கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால் அடுத்ததாக எமிஜாக்சனை தேர்வு செய்தார்களாம். அவர் நடித்திருந்தால் இன்னும் படம் பிரமாதமாக இருந்திருக்கும் என பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Vanessa_Hudgens
Vanessa_Hudgens
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment