மச்சி லாஸ்லியாவ லவ் பண்றனு சொன்ன.! கொளுத்தி போட்ட ஹர்பஜன் சிங்.!

ஷாம் சூர்யா மற்றும் ஜான் பால்ராஜ் இவர்கள் இயக்கி தயாராகும் திரைப்படம் தான் ஃப்ரெண்ட்ஷிப். இத்திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இவருக்கு ஜோடியாக பிக்பாஸில் பிரபலமான லாஸ்லியா அவர்கள் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.  இப்படத்தில் வில்லனாக அர்ஜுன் மற்றும் நகைச்சுவை கேரக்டரில் சதீஷ் நடிக்கிறார்.

கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட பிரண்ட்ஷிப் திரைப்படம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதாகவும் படப்பிடிப்பு மிக விரைவாகவும் நடந்து வருகிறது என சமீபத்தில் படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில்  நகைச்சுவை நடிகரான சதீஷ் பிரெண்ட்ஷிப் படக்குழுவினருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

சதீஷின் ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ஹர்பஜன் சிங் ” மச்சி என்ன இப்படி பச்சயா பொய் சொல்ற நீ லாஸ்லியாவை தானே லவ் பண்றேன்னு சொன்ன. அண்ணிக்கு இந்த விஷயம் தெரியுமா? நம் நட்பு என்றும் தொடரும் தோழா” என்று கூறினார்.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த சதீஷ் அய்யய்யோ எனக்கு இந்த விஷயம் இப்ப தான தெரியும். லாஸ்லியாவை ஒரு தோழியாக நினைத்துதான் நான் லவ் யூ என்று சொன்னேன். என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.

ஹர்பஜன் சிங் நடிகர் சதீஷ் வீடியோ ஆனந்த நகைச்சுவையான ட்விட்டர் இப்பதிவுகள் ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Comment

Exit mobile version