எமனே தவறு செய்தாலும் தட்டி கேட்பேன் பிரம்மாண்டமாக வெளியானது மாவீரன் ட்ரெய்லர்.!

maaveeran
maaveeran

தமிழ் சினிமாவில் மிகக் குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை அடைந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் முதலில் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சி மற்றும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் பின்பு தனக்கு கிடைத்த சினிமா வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முன்னணி நடிகராக உயர்ந்து நிற்கிறார்.

இவர் தற்பொழுது மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாக்கியுள்ளது . மேலும் இந்த திரைப்படத்தில் அதிதி சங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி மாவீரன் திரைப்படம் திரைக்கு வர இருப்பதால் படத்தின் பிரமோஷனல் பட குழு தீவிரமாக இருந்து வருகிறது மேலும் சிவகார்த்திகேயன் தன்னுடைய டப்பிங் பணிகளை முடித்துள்ளார் இந்த நிலையில் மாவீரன் திரைப்படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இந்த ட்ரெய்லரை பார்த்த பல ரசிகர்கள் லைக் செய்தும் கமெண்ட் செய்தும் வருகிறார்கள்.