சிவகார்த்திகேயனின் மாவீரன் ரசிகர்களிடம் வெற்றி பெற்றதா.! இதோ முழு விமர்சனம்

maaveeran : சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் தீபாவளி தினத்தில் வெளியாகிய திரைப்படம் பிரின்ஸ் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருந்தார்கள் இந்த நிலையில் தற்பொழுது மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார், இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

மேலும் மாவீரன் திரைப்படத்தில் அதிதி சங்கர், யோகி பாபு, சுனில், மிஸ்கின் என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் இந்த திரைப்படத்திற்கு பரத் சங்கர்தான் இசையமைத்துள்ளார்.

படத்தின் கதை

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் பத்திரிக்கையில் கார்ட்டூன் வரையும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இவர் தன்னுடைய தாய் மற்றும் தங்கையுடன் ஒரு குப்பத்தில் வசித்து வருகிறார். அதேபோல் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எந்த ஒரு பிரச்சனைக்கும் செல்லாமல் மிகவும் அமைதியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் குப்பத்தில் இருக்கும் மக்களை அமைச்சர் அவருடைய ஆதரவாளர்கள் என அனைவரையும் வேறு பகுதியில் உள்ள அரசாங்கம் கட்டிக் கொடுக்கும் வீட்டிற்கு மாற்றுகின்றார்கள்.

அங்கு சென்றவுடன் தான் தெரிய வருகிறது வீடு மிகவும் மோசமாக கட்டிக் கொடுத்துள்ளார் என்று இந்த சமயத்தில் சிவகார்த்திகேயனுக்கு மட்டும் ஒரு குரல் கேட்கிறது. அதன் பிறகு தான் சிவகார்த்திகேயனுக்கே தெரிய வரும் இந்த வீடு இடிய போகிறது என்று அந்தக் குரலை வைத்துக் கொண்டு மக்களை எப்படி சிவகார்த்திகேயன் காப்பாற்றுகிறார் என்பதுதான் மாவீரன் திரைப்படத்தின் கதை.

தொடை நடுங்கியாக வாழ்ந்து வந்த சிவகார்த்திகேயன் எந்த ஒரு பிரச்சனைக்கும் போகாத ஒரு மனிதனாக மிகவும் அமைதியாக வாழ்ந்து வந்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமாக நடித்திருந்தார். தன்னுடைய வெகுளித்தனத்தால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். தனக்கு மட்டும் கேட்கும் அந்த குரலை மேலே அடிக்கடி பார்த்து பேசுகிறார் இதனால் அரங்கமே அதிர்கிறது சிரிப்பொலியில் மிதக்கிறது. படத்தில் சிவகார்த்திகேயன் மட்டும் ஹீரோ கிடையாது இன்னொரு ஹீரோ என்று கேட்டால் அது யோகி பாபு தான் தனது முகபாவனைகளாலும் ஒன் லைன் காமெடியாலும் அசத்தியுள்ளார்.

அதேபோல் இயக்குனர் நல்ல ஒரு கதாபாத்திரத்தை யோகி பாபு அவர்களுக்கு கொடுத்துள்ளார். ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வரும் அதிதி சங்கர் அவர்களுக்கு வழக்கமாக தமிழ் சினிமாவில் வரும் நடிகைகளுக்கு என்ன ரோலோ அதே போல் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வில்லனாக மிஸ்கின் மிரட்டியுள்ளார் இனிவரும் ஒவ்வொரு திரைப்படத்திலும் அவரை வில்லனாக எதிர்பார்க்கலாம் என தெரிகிறது அந்த அளவு ஒரு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அதேபோல் தெலுங்கு நடிகர் சுனிலுக்கு சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் அதனையும் சிறப்பாக நடித்துள்ளார்.

ஒரு படைப்பாளிக்கு சமூகத்தின் மீது கோபம் இருந்தால் மட்டும் பத்தாது அதனை மக்களுக்கு புரியும்படி எடுத்துச் சொல்ல வேண்டும் அந்த வகையில் ஒரு சிறந்த அரசியல் திரைப்படத்தினை கொடுத்துள்ளார் மடோன் அஸ்வின். சமூகத்தின் மீதான தன்னுடைய பார்வையை தன்னுடைய இரண்டாவது திரைப்படத்தின் மூலம் காட்டியுள்ளார்.

பரத் இசையில் பாடல்கள் நன்றாக இருந்தாலும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்தில் அனிருத் அவர்களை மிஸ் செய்வது தெரிகிறது. அதேபோல் ஒரு சில இடங்களிலேயே படம் நகர்ந்தாலும் பெரிதாக போர் அடிக்காமல் செல்கிறது முதல் பாதி ஆரம்பித்து இடைவெளி வரும் வரை கண்கள் எங்கேயும் சிதறாமல் திரை நகர்ந்து கொண்டிருக்கிறது இரண்டாவது பாதி கொஞ்சம் ஸ்லோவாக சென்றாலும் கிளைமாக்ஸ் காட்சி வழக்கம்போல் உள்ள தமிழ் திரைப்படம் போலவே முடிகிறது.

இந்த வகையில் அரசு மக்களுக்கு கட்டிக் கொடுக்கும் வீடு எந்த அளவிற்கு இருக்கும் என்பதை மிகவும் தெளிவாக இந்த திரைப்படத்தில் காட்டியுள்ளார்கள்.

Leave a Comment