ஒரு சாயலில் கமலின் விக்ரம் மறு சாயலில் அஜித்தின் துணிவு.! அதிரடி அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன்.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்பொழுது மாவீரன் திரைப்படம் மிகவும் பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகிய டான் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது. அப்படி இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் திடீரென மாவீரன் திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை தனது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாகவும் சிவகார்த்திகேயன் கதாநாயகனாகவும் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது இந்த திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ்ஸில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது சிவகார்த்திகேயன் திரை பயணத்தில் இந்த திரைப்படம் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் சத்யராஜ், உக்ரைன் நடிகை மரியா பிரேம்ஜி, நவீன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்த பிரிண்ட்ஸ் திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தில் வெளியானது இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய நெகட்டிவ் விமர்சனம் கிடைத்தது அதுமட்டுமில்லாமல் திரையரங்கில் ஓடிக் கொண்டிருந்த இந்த திரைப்படத்தை ஒரே வாரத்தில் திரையரங்க உரிமையாளர்கள் தூக்கினார்கள்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து மண்டேலா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அஸ்வின் கூட்டணியில் தற்பொழுது மாவீரன் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் அதிதி சங்கர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் மூலம் விட்டதை மீண்டும் பிடித்த விட வேண்டும் என்பதில் மிகவும் ஆவலுடன் இருக்கிறார் சிவகார்த்திகேயன். கடந்த வருடம் தொடங்கப்பட்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு  இன்னும் நடைபெற்று வருகிறது.

அது மட்டும் இல்லாமல் இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக படம் பாதியில் நிறுத்தப்பட்டது இந்த தகவல் சமூக வலைதளத்திலும் தியாக பரவியது இதனைத் தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஆனால் பட குழுவினர் எந்த ஒரு பிரச்சனையும் நடக்காதது போல் அனைத்தையும் மூடி மறைத்தார்கள் அப்படி இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் திரையுலகத்திற்கு வந்து 11 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் மாவீரன் படபிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

அப்பொழுது பட குழுவினர்கலுடன் சிவகார்த்திகேயன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் இந்த நிலையில் மாவீரன் திரைப்படத்திற்கு mocobot ரோபட்டிக் ஆர் ம் தொழிற்பதை பயன்படுத்துவதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ளார் இந்த தொழில்நுட்பம் சினிமாவில் பீஸ்ட், விக்ரம் துணிவு ஆகிய திரைப்படங்களின் ஆக்ஷன் காட்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது இதனை தற்பொழுது மாவீரன் திரைப்படத்திற்காக பயன்படுத்தி உள்ளதால் விக்ரம் துணிவு திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளை போல் மாவீரன் திரைப்படத்திலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

sivakarthikeyan
sivakarthikeyan

Leave a Comment