வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் டிரைலர் இதோ.!

0

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இவர் ஆரம்ப காலகட்டத்தில் நல்ல ஹிட் திரைப்படங்களை கொடுத்துவந்தார். அதன் பிறகு ஒரு காலகட்டத்தில் படங்களில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டாததால் இவர் மீது பல விமர்சனங்கள் எழுந்தது அது மட்டுமில்லாமல் படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வராமல் இழுக்கடித்தார் என பலரும் குற்றச்சாட்டு அளித்தார்கள்.

இந்த நிலையில் சிம்பு மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் தற்போது இவர் மீது எந்த ஒரு சர்ச்சையும் வராமல் படங்களில் நடிப்பதில் மட்டுமே அதிக ஆர்வம் காட்டி வருகிறார் இந்நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் மாநாடு இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மேலும் என்ற திரைப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.மேலும் எஸ் ஜே சூர்யா போலீஸ் அதிகாரியாக இந்த திரைப்படத்தில் மிரட்டியுள்ளார். இப்படி பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மாநாடு திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரளாகி வருகிறது.

மேலும் சிம்பு அடுத்ததாக வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்திற்காக சிம்பு அதிரடியாக உடல் எடையைக் குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

இதோ மாநாடு திரைப்படத்தின் டிரைலர்.