பட்டைய கிளப்பும் மாநாடு படத்தின் டீசர்.. புதிய லுக்கில் வலம் வரும் சிம்பு.!

நடிகர் சிம்பு ஈஸ்வரன் திரைப்படத்தை தொடர்ந்து மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.

படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் சுரேஷ் காமாட்சி எடுத்து உள்ளார்.

இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து பிரேம்ஜி, கருணாகரன், எஸ் ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் எடிட்டராக பிரவின் பணியாற்றியுள்ளார்.சண்டை பயிற்சி -செல்வா மற்றும் பலர் பணியாற்றியுள்ளனர்.

மாநாடு திரைப்படத்தின் டீஸர் தற்போது வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் சிம்பு இந்த படத்தில் ஒரு புதிய லுக்கில் வலம் வருகிறார். இது ஒரு ஆக்ஷன் திரைப்படமாக இருக்குமென டீசரை பார்த்தாலே புரிகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

 

 

Leave a Comment