மாநாடு படப்பிடிப்பில் இருந்து வெளியான வீடியோ கிண்டலடித்த ரசிகர்கள்.!

0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு இவர் கடைசியாக நடித்த திரைப்படம் வந்தால் ராஜாவாகத்தான் வருவேன், இந்த திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது, அதுமட்டுமில்லாமல் சிம்பு இந்த திரைப்படத்தில் குண்டாக இருந்ததாக விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில் சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார், இந்த திரைப்படம் நீண்டகாலமாக தொடங்காமல் இருந்தது அதனால்  கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகின, ஆனால் அதன் பிறகு வெங்கட் பிரபு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

ஜூன் 25 படப்பிடிப்பு தொடங்கும் என அறிவித்திருந்த நிலையில் இன்னும் சில காரணங்களால் படப்பிடிப்பு தொடங்க வில்லை, இந்த நிலையில் ஜூலை 8 தேதி படப்பிடிப்பு தொடங்கும் என அறிவித்துள்ளார்கள், இதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது, இந்த வீடியோவில் சிம்பு கதையைப் படிப்பது போல் இருக்கிறது, இதைப் பார்த்த ரசிகர்கள் இதற்கெல்லாம் ஒரு வீடியோவா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.