மாநாடு திரைப்படத்தில் தயவுசெய்து நடிக்காதீர்கள்.! பிரபல நடிகருக்கு கோரிக்கை வைத்த ரசிகர்கள் என்ன காரணம் தெரியுமா.?

தமிழ்சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் அரவிந்த்சாமி இவர் தற்பொழுது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான தலைவி திரைப்படத்தில் நடித்து வருகிறார். தலைவி திரைப்படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் நடித்து வருகிறார் அரவிந்த்சாமி அச்சு அசல் எம்ஜிஆர் போலவே இருக்கிறார்.

இந்த புகைப்படம் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது மேலும் அரவிந்த்சாமி வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் மாநாடு திரை படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு சமீபத்தில் கசிந்துள்ளது இன்னும் இரண்டு தினங்களில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் எம்ஜிஆர் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களும் இப்படி புனிதமான வேடத்தில் நடித்து விட்டு வில்லன் வேடத்தில் நடிப்பதா வேண்டவே வேண்டாம் என கோரிக்கை வைத்து வருகிறார்கள் ரசிகர்கள்.

இப்படி ஒரு கோரிக்கை ரசிகர்கள் வைத்துள்ளதாக அரவிந்த்சாமி இந்த கோரிக்கையை ஏற்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

Exit mobile version