“மாநாடு” திரைப்படம் உலக அளவில் மொத்தமாக அள்ளிய கோடிகள் இவ்வளவுதான் – உண்மையை வெளிச்சத்தில் போட்டுடைத்த தயாரிப்பாளர்.!

நடிகர் சிம்பு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஒரு சில பாடல்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வைரலாகியதை அடுத்து படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் இதனை அடுத்து சிம்பு கொரோனா குமாரு, பத்துல தல போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடைசியாக சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படம் உலக அளவில் அதிக திரையரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் எதிர்பார்க்காத அளவு வரவேற்ப்பை பெற்றது.

மேலும் மாநாடு படத்திற்கு முன்பு சிம்பு நடிப்பில் வெளிவந்த ஒரு சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும் மாநாடு படம் சிம்பு கேரியரில் ஒரு சிறந்த படமாக அமைந்தது. இந்தப்படம் அப்போது வசூலில் 100 கோடியை தாண்டியுள்ளது என தகவல்கள் வெளி வந்ததை அடுத்து சிம்பு ரசிகர்கள் மற்றும் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.

ஆனால் அப்படத்தின் உண்மையான வசூல் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் படக்குழு பக்கத்திலிருந்து வெளியிடாமல் இருந்து வந்தனர். இதையடுத்து தற்போது மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அப்படத்தின் உண்மையான வசூல் குறித்து வெளியிட்டுள்ளார்.

அதன்படி மாநாடு திரைப்படம் உலக அளவில் 117 கோடி கலெக்ட் செய்து சாதனை படைத்தது என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வருடத்தில் பிளாக்பஸ்டர் படமாக மாநாடு அமைந்தது எனவும் வெளியிட்டுள்ளார். இதற்காக சிலம்பரசன் மற்றும் மாநாடு பட குழுவினருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Comment