விஜய் டிவி : நிகழ்ச்சிகளை சீரும் சிறப்புமாக தொகுத்து வழங்கி வரும் மா கா பா ஆனந்த்.! ஒரு எபிசோடிற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? அசர வைக்கும் தகவல்.

மீடியா உலகில் இருப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தனது  திறமையை படிப்படியான வெளிக்காட்டி ஒரு கட்டத்தில் நிலையான இடத்தை கடைசியில் பிடித்து விடுவார்கள் அதுக்கு உதாரணத்திற்கு நாம் மா கா பா ஆனந்தை குறிப்பிடலாம்.

இவர் தொகுப்பாளராக அறிமுகம் ஆவதற்கு முன்பாக ரேடியோ  தொகுப்பாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார் அதன் பின் விஜய் டிவி தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், அது இது எது என தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் தனது அசாதாரணமான பேச்சின் மூலம் ரசிகர்களையும், மக்களையும் தன் பக்கம் இழுத்தார் ஒரு கட்டத்தில் இவருக்கு பின்தொடரும் எண்ணிக்கை அதிகமாக இருந்ததோடு மட்டுமல்லாமல் இவருக்கு திறமை அதிகமாக இருந்ததால் வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் 2014-ம் ஆண்டு “வானவராயன் வல்லவராயன்” என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதன்பின் மீசையமுறுக்கு, பஞ்சுமிட்டாய், மாணிக் போன்ற பல்வேறு திரைப்படங்களில் இவர் நடிப்பில் உருவாகின ஆனால் இவருக்கு “ஹீரோ” என்ற அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது என்னமோ கடலை திரைப்படம் தான்.

இப்படி வெள்ளித்திரையில் பயணித்தாலும் அவருக்கு பிரதான தொழில் தொகுப்பாளர் என்பதால் விஜய் டிவியும் அவரை விட்டு விடாமல் தக்க வைத்துக்கொண்டு சம்பளத்தை ஏற்று கொடுத்து வருகிறது.

மா கா பா ஆனந்த் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அசத்தி வருகிறார் அந்த வகையில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார் அதுமட்டுமல்லாமல் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் தற்போது மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்குகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் மா கா பா ஆனந்த் ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்ற தகவல் தற்போது கூறப்பட்டு வருகிறது அதாவது இவர் ஒரு எபிசோடிற்கு சுமார் ஒரு லட்சம் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளிவருகின்றன.

Leave a Comment