தோனிக்கு ஆரத்தி எடுத்து மலர் தூவிய இளம் நடிகர்.!! வைரலாகும் வீடியோ.

0

m.s.dhoni video viral:கொரோனா காரணத்தால் ஐபிஎல் போட்டி நடக்குமோ நடக்காதோ என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்ததார்கள். ஒரு வழியாக சனிக்கிழமை ஐபிஎல் தொடங்கியது எனவே அனைவரும் மிக்க சந்தோஷத்துடன் ரசித்து வருகிறார்கள் அதிலும் குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்சு ஆகிய இரு அணிக்கும் இடையே போட்டி நடந்தது.

மிகவும் விறுவிறுப்பாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றிப் பெற்றது. மேலும் முதல் போட்டியே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு என்பதால் இந்த சீசன் மிக ஆவலுடன் ரசிகர்களால் பார்க்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் தோனி ஓய்வுக்குப் பிறகு பங்கு பெற்ற முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தார்கள். மேலும் இந்த போட்டியில் தோனி 2 சாதனைகளை படைத்துள்ளார். அதில் ஒன்று தோனி இரண்டு கேட்ச்களை பிடித்து ஐபிஎல் ஆட்டத்தில் 100 கேட்ச்களை பிடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். அதேபோல ஒரு கேப்டனாக தோனிக்கு இது 100வது  வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதை பலர் கொண்டாடி வந்தனர். மேலும்  தோனியின் தீவிர ரசிகரான பெரிய காக்கா முட்டையாக நடித்த விக்னேஷ்  தோனி விளையாடும்போது டிவிக்கு மணி அடித்து மலர்தூவி தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

View this post on Instagram

Thala Dharisanam ????

A post shared by J Vignesh (@kaakamuttai_vignesh_official_) on

vignesh
vignesh