எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி.! பலரும் பார்த்திராத புகைப்படம்.!

2004 ஆம் ஆண்டு எம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து அசின், நதியா, பிரகாஷ்ராஜ் என பலரும் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படத்தை ஜெயம் புரட்டக்சன் தயாரித்திருந்தது. அதேபோல் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

அதுமட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபீஸில் எண்பத்தி எட்டு கோடி வரை வசூல் செய்தது. இந்த திரைப்படம் அம்மாவுக்கும் மகனுக்கும் இடையே உள்ள பாசத்தை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் அதேபோல் இந்த திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தது. இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் மினிமம் கேரண்டி திரைப்படங்களை கொடுத்து வருபவர். தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும் எதார்த்தமான பேச்சாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். அதுபோல் ஒரு வருடத்தில் அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் விஜய் சேதுபதி நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் விஜய் சேதுபதிக்கு லாபம் திரைப்படமும் அனபெல்லா சேதுபதி என்ற திரைப்படமும் வெளியாகி ரசிகர்கள் கண்டு களித்து வருகிறார்கள். நடிகர் விஜய் சேதுபதி 2010ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக ஹீரோவாக அறிமுகமானார். அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

vijay sethupathi
vijay sethupathi

தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார் இந்த நிலையில் விஜய் சேதுபதி சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்தார் அந்தப் பேட்டியில் ஜெயம் ரவி அவர்கள் நடித்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்திலும் நான் நடித்திருந்தேன் அந்த திரைப்படத்தில் ஒரு ஓரமாக நான் நின்று கொண்டிருந்தேன். ஆனால் அந்த திரைப்படத்தில் நான் நடித்து இருந்ததை யாரும் அவ்வளவாக கவனித்திருக்க முடியாது ஏனென்றால் நான் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தேன்.

எனக்கு சிறிய ரோல் என்பதால் பலருக்கும் என்னை தெரியாது என கூறியிருந்தார் இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்துள்ள அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அட விஜய் சேதுபதி எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் நடித்துள்ளார் இத்தனை நாள் இது தெரியாமல் போச்சு என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

vijay sethupathi
vijay sethupathi

Leave a Comment