ஜெயம் ரவி ஆக்ஷனில் மிரட்டிய எம். குமரன் S/O மகாலட்சுமி படத்தில் நடிகர் தனுஷ்.. வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருபவர் ஜெயம் ரவி. இவர் முதலில் “ஜெயம்” என்னும் படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் ஜெயம் என்னும் பெயரை தனது பெயருடன் சேர்த்து “ஜெயம் ரவி” என சினிமா உலகில் வலம் வருகிறார்.

இந்த படத்தைத் தொடர்ந்து நிமிர்ந்து நில், பூலோகம், பேராண்மை, எங்கேயும் காதல், தீபாவளி, சந்தோஷ் சுப்பிரமணியம், பூமி, ரோமியோ ஜூலியட், அடங்கமறு என பல ஹிட் படங்களை கொடுத்தாலும்.. ஜெயம் ரவி கேரியரில் மிகப்பெரிய ஒரு படமாக பார்க்கப்பட்டது 2004 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான “எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி” திரைப்படம் தான்..

இந்த படம் ஆக்சன் சென்டிமென்ட் காதல் என அனைத்தும் கலந்து ஒரு படமாக இருந்ததால் வெளிவந்து ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸை வெகுவாக திரையரங்கு பக்கம் இழுத்தது. இதனால் இந்த படம் ரொம்ப நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் வசூலில் ருத்ர தாண்டவம் ஆடியது ஒட்டுமொத்தமாக எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படம் சுமார் 54 கோடியை கலெக்ஷன் செய்தது.

அந்த சமயத்தில் ஜெயம் ரவியின் கேரியரில் அதிகம் வசூல் செய்த படமாக இது இருந்தது. இந்தப் படத்தில்  ஜெயம் ரவி உடன் இணைந்து அசின், பிரகாஷ்ராஜ், விவேக், நதியா, ஜனகராஜ், சுந்தர், வையாபுரி என மிகப் பெரிய திரைபட்டாளமே நடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா இந்த படத்திற்கு செமையாக இசையமைத்தார். இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்துமே ஹிட் அடித்தது இந்த படத்தின் பூஜையில் நடிகர் தனுஷ், ஸ்ரீகாந்த், சத்யராஜ் மகன் உள்பட பலர் கலந்து கொண்டனர் இப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்..

m kumaran so mahalaxmi
m kumaran so mahalaxmi
m kumaran so mahalaxmi
m kumaran so mahalaxmi

Leave a Comment