குறைந்த பட்ஜெட்டில் உருவான LKG திரைப்படம் – ஒட்டு மொத்தமாக அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.? உண்மையை உடைக்கும் பிரபல தயாரிப்பாளர்.!

சினிமா உலகம் புதியதை நோக்கி நகர நகர பல விஷயங்கள் மாறுகின்றன அந்த வகையில் அண்மை காலமாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் பல படங்கள் எடுக்கப்படுகின்றன ஏன் தென்னிந்திய சினிமாவில் பாகுபலி, பாகுபலி 2, RRR போன்ற படங்கள் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் போட்ட பட்ஜெட்டையும் தாண்டி இந்த திரைப்படங்கள் நல்ல லாபம் பார்த்துள்ளன அதேபோல் தான் தற்பொழுது தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் கூட 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தயாரிப்பாளரும் இயக்குனருமான கே ராஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் அதாவது பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களால் தயாரிப்பாளர்கள் படும் அவதிகள் கொஞ்ச நஞ்சமல்ல…

தயாரிப்பாளர்கள் பிரம்மாண்ட பட்ஜெட்டில் படத்தை தயாரிப்பதை விட குறைந்த பட்ஜெட்டில் படங்களை எடுத்தாலே நல்ல லாபம் பார்க்கலாம் என கூறினார் அதற்கு எடுத்துக்காட்டாக கூட ஆர் ஜே பாலாஜி நடித்த எல் கே ஜி திரைப்படம் சுமார் 3.5 கோடி மதிப்பில் தான் அந்த படம் எடுக்கப்பட்டது ஆனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடியது.

K .RAJAN

அதன் காரணமாக எல்கேஜி திரைப்படம் லாபம் மட்டுமே சுமார் 18 கோடி பார்த்ததாக கூறினார். 5 கோடி 10 கோடி இருந்தாலே போதும் இப்போதைய சூழலுக்கு நல்ல ஒரு படத்தை எடுக்க முடியும் இதை தயாரிப்பாளர்கள் உணர்ந்து கொண்டு இது போன்று படங்களை தயாரித்தாலே நல்ல லாபம் பார்க்கலாம் எனக் கூறினார்.

Leave a Comment

Exit mobile version