காதலர் தினத்தில் தனது காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நயன்தாரா.!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவரை தற்பொழுது லேடி சூப்பர் ஸ்டார் என்று தான் அழைக்கிறார்கள், இவர் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கிறார், இவர் விக்னேஷ் சிவன் என்ற இயக்குனரை காதலித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

ஆனால் இதுவரை இருவரும் தங்களது காதலை வெளிப்படையாக கூறியது கிடையாது, நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றினார்கள் அப்போது இவர்களுக்குள் காதல் மலர்ந்தது.

இருவரும் வெளிப்படையாக நாங்கள் காதலர்கள் தான் என்று கூறாமல் இருந்தாலும் அடிக்கடி இருவரும் ஒன்றாக இணைந்து வெளிநாடு சுற்றுலா செல்வது அங்கு மிகவும் நெருக்கமாக புகைப்படத்தை எடுத்துக் கொண்டு சமூக வலைத்தளத்தில் பதிவிடுவது ஆகியவற்றை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்,

அதுமட்டுமில்லாமல் பிறந்தநாள் மற்றும்  பண்டிகை வந்துவிட்டால் இருவரையும் கையில் பிடிக்க முடியாது, ஏனென்றால் இருவரும் ஒன்றாகத்தான் இருப்பார்கள், அதற்கான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் அடிக்கடி சமூகவலைதளத்தில் வெளியிடுவார், தற்பொழுது நயன்தாரா மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அதற்காக சுசீந்திரம் கோவில் பகவதி அம்மன் கோவில் ஆகிய இடங்களுக்கு விக்னேஷ் சிவனுடன் சென்றுள்ளார்.

இந்த நிலையில் பிப்ரவரி 14 அன்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது அப்போது இருவரும் மிகவும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார் நயன்தாரா.

nayanthara
nayanthara

Leave a Comment