OTT யில் வெளியாகப் போகும் இளசுகளின் மனம் கவர்ந்த ‘லவ் டுடே’ திரைப்படம்.! இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

தமிழ் சினிமாவில் சமீப காலமாக இளம் இயக்குனர்களின் வரத்து அதிகரித்துக் கொண்டே போகிறது. அது மட்டும் இல்லாமல் இயக்குனர்கள் ரசிகர்களின் மனம் கவர்ந்தபடி படங்களை இயக்கி வெற்றிகண்டு வருகிறார்கள் அந்த வகையில் பல தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்து வருகிறார்கள் இளம் இயக்குனர்கள்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியாக்கிய லவ் டுடே திரைப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை நிலைநாட்டியது. அதுமட்டுமில்லாமல் இவர் இதற்கு முன்பு பல குறும்படங்களை இயக்கி வெற்றி கண்டவர் அதன் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியாகிய கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

பிரதீப் ரங்கநாதன் இந்த திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர் மனதில் இடம் பிடித்தார் இதனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக்கிய திரைப்படம் தான் லவ் டுடே இந்த திரைப்படத்தை ஜி எஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் தான் ஹீரோவாக நடித்திருந்தார் அது மட்டும் இல்லாமல்  நாச்சியார் திரைப்படத்தில் நடித்த இவானா இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக்கிய இந்த திரைப்படம் கடந்த நவம்பர் 4ஆம் தேதி திரையரங்கத்தில் வெளியாகியது இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களையும்  பெற்று வசூலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 40 கோடிக்கு மேல் வசூல் செய்து தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை பெற்று கொடுத்தது. இந்த நிலையில் இந்த திரைப்படம் OTT தளத்தில் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கையில் தற்பொழுது OTT ரிலீஸ் குறித்த தகவலை பட குழு வெளியிட்டுள்ளது.

லவ் டுடே திரைப்படம் வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதி OTT இணையதளமான netflix தளத்தில் வெளியாக இருக்கிறது. இதனை பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment