நபர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட லவ் டுடே இவானா.! காதலரா? மாமா குட்டியா? என கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..

லவ் டுடே திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவானா தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் நிலையில் அதில் My half soul என்ற கேப்டன் உடன் வெளியிட்டதால் ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.

எனவே ரசிகர்கள் யார் அந்த பையன் என கேட்டு வரும் நிலையில் ஒருவேளை அவருடைய காதலராக இருப்பாரோ என கேள்வி எழுப்பி உள்ளனர். இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் ஆகியோர்களுடைய கூட்டணியில் வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் நாச்சியார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை இவானா.

இதற்கு முன்பு இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் இவர் கடந்த 2000ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி பிறந்த நிலையில் தன்னுடைய பிறந்தநாளை மிகவும் சிறப்பாக இந்த ஆண்டு கொண்டாடினார். இப்படிப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது.

மேலும் மாமா குட்டி என்ற டயலாக் பல ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த படத்தில் சேலை, சுடிதார் போன்ற உடைகளை அணிந்து மிகவும் க்யூட்டாக நடித்திருந்த நிலையில் இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர். இந்தப் படத்தின் வெற்றியினை தொடர்ந்து தற்பொழுது கிரிக்கெட் வீரர் டோனி தயாரிப்பில் உருவாகி வரும் லெட்ஸ் கெட்டிங் மேரிட் என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணத்து ஜோடியாக நடித்து வருகிறார் இவானா. இந்த படத்தில் நதியா, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் நடிகை இவானா பிறந்த நாளை முன்னிட்டு ஏகப்பட்ட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளத்தின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்த நிலையில் My Half soul என்ற கேஷ்னுடன் இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

ivana
ivana

 

எனவே இதனை பார்த்த ரசிகர்கள் உங்கள் காதலாராயண கமெண்ட் செய்து வந்தனர். ஆனால் அந்த புகைப்படத்திற்கு #justtwinsthings என இவானா தெளிவாக கூறியிருக்கும் நிலையில் மேலும் ஒரே நாளில் பிறந்த இரட்டை குழந்தைகள் என்றும் அவர் தன்னுடைய சகோதரர் என்பதையும் ஹாஸ்டல் போட்டு விலகி உள்ளார்.

Leave a Comment