இந்த வயதில் மாதவனுக்கு வந்த காதல் லவ் ப்ரொபோஸ்.! அவர் அளித்த பதிலை பார்த்தீர்களா.!

0

தமிழ் திரை உலகில் ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் மிகவும் பட்டிதொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கிய நடிகர் என்றால் அது மாதவன் தான் இவர் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே என்ற படத்தில் நடித்தார் அந்தப் படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வெற்றியை தந்ததால் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து பட்டி தொட்டி எங்கும் மக்கள் மனதில் புகழ் பெற்று விளங்கி வருகிறார்.

அலைபாயுதே திரைப்படத்தில் மிகவும் நன்றாக நடித்ததால் இவரை ரசிகர்கள் பலரும் சாக்லேட் பாய் என்று தான் அழைத்து வருகிறார்கள் அதற்கு காரணம் இவரது அழகான பேச்சும் தனக்கென ஒரு ஸ்டைலையும் வைத்திருக்கிறார் மேலும் அலைபாயுதே படத்தை தொடர்ந்து இவர் நடித்த அன்பே சிவம்,ஆயுத எழுத்து,மின்னலே போன்ற பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

தமிழை தாண்டி இவர் கோலிவுட்,பாலிவுட் வரை சென்று அங்கேயும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை நிரந்தரமாக உருவாக்கி வைத்திருக்கிறார் அந்த வகையில் இவரது 51வது பிறந்தநாளை நேற்று அவர் கொண்டாடியுள்ளார் இவரது பிறந்த நாளிற்கு தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள் அதேபோல் பாலிவுட் மற்றும் கோலிவுட்டில் நடித்து வரும் பிரபலங்களும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள்.

இவரது நடிப்பில் தற்பொழுது நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது என்பது தெரிந்தது தான் இந்நிலையில் இவரது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு ரசிகை ஒரு பதிவை போட்டுள்ளார் அதாவது சமூக வலைதள பக்கங்களில் அந்த ரசிகை எனக்கு 18 வயது தான் ஆகிறது என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என கேட்டுள்ளார்.

madhavan
madhavan

இதற்கு கொஞ்சம் கூட தாமதம் செய்யாமல் நடிகர் மாதவன் என்ன கூறியுள்ளார் தெரியுமா மாதவன் என்னைவிட உங்களுக்கு மிகவும் நல்ல கணவர் கிடைப்பார் அதுவரை பொறுமையாக இருங்கள் என பதிலளித்துள்ளார்.மேலும் மாதவன் போட்ட பதிவு தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ஒரு சில ரசிகர்கள் இவரது குணமே தனிதான் என கூறி வருகிறார்கள்.