நீங்கள் காதலில் ஐந்து நிலையை கடந்துவிட்டீர்களா அப்பொழுது இனி பிரேக்கப் தான் உங்களுக்கு.!

0
love
love

நீங்கள் நீண்ட காலமாக காதலித்து வருகிறீர்களா அது மிக எளிதாக நிகழ்வதில்லை, அதேபோல் உங்களின் காதல் முடிவடைகிறது என்றாலும் உடனே நடந்து விடுவதில்லை இதற்கு சில படிகள் இருக்கின்றன என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. டென்னஸ் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்கள் காதல் முறிவுக்கு ஐந்து நிலை இருப்பதாக கண்டுபிடித்துள்ளார்கள், இந்த ஆய்வை இன்றைய இளைஞர்களிடம் செய்து கண்டுபிடிக்கப்பட்டது என கூறியுள்ளார்.முதல்நிலை – இந்த முதல் நிலையில் காதல் மலரும் பருவம், அதேபோல் இந்த முதல் நிலையில் பிரேக்கப் என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது இந்த பருவம் கிட்டத்தட்ட honeymoon பருவம் என்று கூறுகிறார்கள் அந்த ஆராய்ச்சியில்.

இரண்டாவது நிலை- இரண்டாவது நிலையில் நம் காதல் சிறப்பாக தான் செல்கின்றன என்ற சந்தேகம் வரும் அதனால் நமது துணையிடம் தவறுகளைக் கண்டுபிடித்து சண்டை போடவோ, அதே போல் காதலில் குறை இருப்பது போல் தோன்றும்.மூன்றாவது நிலை – இந்த மூன்றாவது நிலையில் தான் காதலிக்கோ அல்லது காதலனுக்கோ பிரேக்கப் என்ற வார்த்தை சிந்தனையில் உதிக்கும், அதேபோல் பிரேக்கப் என்ற வார்த்தையை ஆழமாக சிந்திப்பார்கள், அதுமட்டுமல்லாமல் இதைச் சொல்லலாமா வேண்டாமா என்ற சிந்தனையிலேயே காதலை முழுமையாக அனுபவிக்க மாட்டார்கள் அதேபோல் தனது துணையை அடிக்கடி தவிர்க்க நினைப்பவர்கள் இதனால் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வார்கள்.

நான்காவது நிலை- இந்த நான்காவது நிலையில் பிரேக்அப் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள், அதனால் தங்களது துணையிடம் இருந்து வரும் போன்கள் மற்றும் செய்திகள் அனைத்தையும் தவிர்ப்பார்கள் அதேபோல் தனது வெறுப்பை நேரடியாக காட்ட தொடங்குவார்கள்.ஐந்தாவது நிலை- இதுதான் காதல் முறையும் நிலை இந்த நிலையில் தங்களது காதல் முறிந்துவிடுகிறது அதனால் தாங்கள் காதல் பரிசாகக் கொடுத்து கொண்ட பரிசுகளை திரும்பக் கொடுத்துவிடுவார்கள் இந்த இடத்தில் மட்டும் தாங்கள் செய்த தவறுகளை சரிசெய்த நினைக்காவிட்டால் கண்டிப்பாக இனி அந்த காதல் மலராது.

இவ்வாறாக காதல் முறிவதற்கு ஐந்து நிலை இருக்கிறது என ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, மேலும் இதிலிருந்து தெளிவாக தெரிவது என்னவென்றால் எதிர்மறை சிந்தனைகள் உதிக்கும் பொழுது காதல் முறிவதற்கான விதை விதைக்கப்படுகிறது அப்பொழுது இதை பேசி தீர்த்து விட்டால் இந்த முடிவு நிலைக்கு செல்ல தேவையில்லை.