வீட்டுக்குள் இருக்கும் போது எனக்கும் கவினுக்கும் நல்ல ரிலேஷன்ஷிப் இருந்தது – மொத்த உண்மையையும் கக்கிய லாஸ்லியா

0
kavin-losliya
kavin-losliya

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை லாஸ்லியா முதலில் இலங்கையில் ஒரு செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி வெற்றிகரமாக போய்க்கொண்டிருந்தார் திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சிகள் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது ஒரு வழியாக அதில் கலந்தும் கொண்டார்.

உள்ளே நுழைந்த தனது திறமை அனைத்தையும் வெளிகாட்டி மக்கள் மற்றும் ரசிகர் மனதில் இடம் பிடித்தார் மேலும் அப்போது நடிகர் கவினை காதலித்தார் ஆனால் வெளியே வந்த பிறகு அதை இருவரும்  பெரிதாக சொல்லிக்கொள்ளாமல் தனது வேலையை பார்க்க ஆரம்பித்தனர்

குறிப்பாக லாஸ்லியா இந்திய முன்னாள் சூழல் பந்து வீச்சாளர் ஹர்பன்சிங் உடன் கூட்டணி அமைத்து பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் கைத்தட்டல் வாங்கினார்

அடுத்ததாக பிக்பாஸ் தர்ஷன் உடன் இணைந்து கூகுள் குட்டப்பா திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்தார் அதன் பிறகு பெரிய அளவு வாய்ப்புகள் கிடைக்காததால் தற்பொழுது பட வாய்ப்புக்காக தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு குதுகளப்படுத்தி வருகிறார்

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை லாஸ்லியா சமீபத்திய பேட்டி ஒன்றில் கவின் உடன் இருந்த ரிலேஷன்ஷிப் குறித்து விலாவாரியாக பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. அதாவது வீட்டுக்குள் இருந்தவரை தங்களுக்குள் ரிலேஷன்ஷிப் இருந்ததாகவும், சூழ்நிலைக்கு அந்த உறவு ஏற்றதாக இருந்தது என்றும், வெளியே வந்ததும் தங்களுக்கு புரிந்து விட்டது

losliya
losliya

இது கண்டிப்பா செட் ஆகாது என நினைத்தோம் பிரிந்து விட்டோம்..  என ஓபன்னாக சொல்வதில் எனக்கு எந்த கவலையும் இல்லை.. நானும் கவினும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது உண்மைதான் என வெளிப்படையாக அவர் கூறி உள்ளார். இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.