லாஸ்லியாவும் கவினின் வருங்கால மனைவி மோனிகாவும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்.. இது என்ன புது ட்விஸ்ட்டா இருக்கு

Actor kavin: நடிகர் கவினுக்கு வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் இவரின் வருங்கால மனைவி மோனிகா குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பட்டித்தோட்டி எங்கும் பிரபலமானவர்தான் கவின். இந்த சீரியலில் வேட்டையன் என்று கேரக்டரின் நடித்திருந்த நிலையில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

இதனை அடுத்து சில ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வந்த கவின் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி தரவில்லை எனவே அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த கவின் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார்.

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துக் கொண்ட கவினுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆனால் பணம் பெட்டியை எடுத்துக் கொண்டு பாதியிலேயே வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியது. அதோடு மட்டுமல்லாமல் பிக்பாஸ் சீசன் 3வது நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சாக்ஷியை காதலிக்க தொடங்கினார்.

ஆனால் திடீரென நான் லாஸ்லியாவை காதலிப்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். பிறகு கவின், லாஸ்லியா இருவரும் காதலிக்க தொடங்கி இந்நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யம் ஆக்கினார்கள். இந்நிகழ்ச்சியில் உள்ளே வந்த லாஸ்லியாவின் தந்தை இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

KAVIN
KAVIN

தந்தையின் எதிர்ப்புக்கு பிறகும் கவினை லாஸ்லியா காதலித்து வந்தார் இவர்கள் இருவரும் நிகழ்ச்சிக்கு பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் கவின் லாஸ்லியா தங்களது காதலை முடித்துக் கொண்டனர். சமீப காலங்களாக தொடர்ந்து இருவரும் தங்களுடைய படங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கவின் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியானது.

அதன்படி, வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று கவினுக்கும் அவருடைய நீண்ட நாள் தோழியான மோனிகா டேவிடிற்ருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மோனிகா டேவிட் லாஸ்லியாவின் தோழி என்பது தெரியவந்துள்ளது. அவர் லாஸ்லியாவிடம் ஸ்டைலிஷ் ஆக பணியாற்றி வருகிறாராம். அப்படி லாஸ்லியாகவும் மோனிகா டேவிட்டும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Comment