திருமண தேதியை அறிவித்த கவின்.. காதல் தோல்வியை தாங்க முடியாமல் பாடல் மூலம் அறிவித்த லாஸ்லியா.!

Kavin : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கவின். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டாடா திரைப்படம் பெரிய வெற்றியடைந்தது. இந்த படத்திற்கு பிறகு கவினின் மார்க்கெட் எகிறி உள்ளது அண்மையில் கூட ஒரு புதிய படத்திற்கான பூஜையை கவின் கலந்து இருக்கிறார்.

இதனால் தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக மாறியுள்ளார் கவின். இவருக்கு சமூக வலைத்தளங்களில் அதிக ரசிகர்களும் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக கவினுக்கு பெண் ரசிகர்கள் அதிகம்.. இந்நிலையில் தற்போது கவின் குறித்த ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வேகம் எடுத்துள்ளன. நடிகர் கவின் அவரது காதலி மோனிகாவை வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம்.

இந்த தகவல் தற்போது பெரிய அளவில் வைரலாகி வருகின்றன. நடிகர் கவின் பிக் பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்ட போது ஒரு பக்கம் நன்றாக விளையாடினாலும் இன்னொரு பக்கம் லாஸ்லியா உடனான காதலால் அவர் பின்னாடியே சுற்றித்திரிந்தார். இருவருக்குமே பிக் பாஸ் வீட்டில் காதல் ஏற்பட்டது.

ஆனால் வெளியில் வந்து இருவரும் பேசிக் கொள்ளவில்லை.. அது ஏன் என்றால் கவின் அவரது காதலி மோனிகாவை பற்றி பிக் பாஸ் வீட்டில் வாய் திறக்காமல் இருந்து விட்டு வெளியில் வந்த பின்பு லாஸ்லியா விடம் மோனிகாவை பற்றி பேசி இருக்கிறார்.

அதனால்தான் இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது. தற்போது கவின் அவரது திருமண தகவலை வெளியிட்ட நிலையில் லாஸ்லியா அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பின்னணியில் ஆயுத எழுத்து படத்தில் இடம்பெற்ற “நெஞ்சமெல்லாம் காதல்” பாடலை ஒலிக்கவிட்டு இருக்கிறார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் கவினின் திருமணம் விஷயம் தெரிந்து தான் லாஸ்லியா இப்படி ரியாக்கட் செய்திருக்கிறார் என கூறி வருகின்றனர். மேலும் கமெண்ட் செக்சன் முழுவதும் கவின் திருமணம் பற்றி தான் கமெண்ட்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

losliya
actress losliya

Leave a Comment

Exit mobile version