இணையதளத்தில் வைரலாகும் லாஸ்லியாவின் அடுத்த வீடியோ.! ஆனால் இந்த முறை வேற லெவல்

Losliya tiktok video: விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்துவழங்கிய பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழில் அறிமுகமானவர் லாஸ்லியா. இவர் இலங்கை,யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சக்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் விளங்கினார். பிறகு அதிலிருந்து விலகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக்பாஸில் சிறுசிறு சர்ச்சைகள் இருந்தாலும் இவருக்கு தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்து வரும் பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் ஹீரோயினாக லாஸ்லியா நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் மேலும் நடிகர் ஆரீ நடிக்கும் பெயரிடாத திரைப்படத்தில் கதாநாயகியாக லாஸ்லியா கமிட்டாகியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகர்கள், நடிகைகள் என அனைவரும் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். அதுபோல இவரும் சூர்யாவின் விக்ரம் நடிப்பில் பிதாமகன் படத்தில் இடம்பெறும் பாடலுக்கு டிக்டாக் செய்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment