விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 3 இந்த நிகழ்ச்சியில் பதினேழு போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள் அவர்களில் லாஸ்லியாவும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக ரசிகர்களை கவர்ந்தவர் லாஸ்லியா.
இவருக்கு சமூகவலைதளத்தில் ஆர்மியும் உருவானது, பிக் பாஸ் 3 சீசன் களில் கலந்து கொண்டவர்களில் ஓவியாவிற்கு பிறகு அதிக ரசிகர்களை கொண்டவர் இவர் தான். இருந்தாலும் கவின் மீது கொண்ட காதலால் அனைவரிடமும் கெட்ட பெயர் சம்பாதித்தார்.
இருந்தாலும் பிக்பாஸ் இறுதி வரை சென்றார் பிக்பாஸ் முடிவடைந்த நிலையில் லாஸ்லியா முதல் முறையாக தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டுள்ளார்.
முதலில் என் மீது காட்டிய அன்பு மற்றும் ஆதரவிற்காக உங்கள் அனைவரிடமும் நன்றி தெரிவிக்கிறேன். நன்றி என்பது சிறிய வார்த்தையாக கருதுகிறேன். உங்களை மிகவும் நேசிக்கிறேன். எனக்கு அளித்த ஆதரவு ஆச்சர்யமாக இருக்கிறது. அதற்காக நன்றி. நீங்கள் அனைவரும் பெருமை கொள்ளும்படி நான் நடந்து கொள்வேன்’ என அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.
