தன்னுடைய முதல் திரைப்படத்தை திரையில் காண்பதற்காக நேரில் சென்ற லாஸ்லியா.! வைரலாகும் வீடியோ.!

சமீப காலமாக தொலைக்காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது டி ஆர் பி யில் யார் முதலிடத்தைப் பிடிக்கப் போகிறோம் என்ற போட்டி அனைத்து தொலைக்காட்சிகளும் இடையே இருந்து வருகிறது. இந்த நிலையில் டிஆர் பியில் எப்படியாவது இடத்தை பிடித்து விட வேண்டும் என விஜய் தொலைகாட்சி புதிய புதிய ரியாலிட்டி புதிய சீரியல் என புதிது புதிதாக ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வரும் ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் கடந்த நான்கு வருடங்களாக இந்த நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்ளும் பலரும் சினிமாவில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் பல புதுமுகங்கள் கலந்து கொண்டார்கள் இதில் தர்ஷன் லாஸ்லியா என பலரும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்கள் ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மூவரும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்து விட்டார்கள்.

இந்த நிலையில் லாஸ்லியா முதன்முறையாக ஹர்பஜன்சிங் அவர்களுடன் இணைந்து பிரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே மிகவும் வைரலானது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் அர்ஜுன், ஹர்பஜன்சிங் சதீஷ் என பல பிரபலங்களும் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்தில் லாஸ்லியா நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது இந்த நிலையில் இந்த திரைப்படம் இன்று செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாகி உள்ளது இந்த திரைப்படத்தை காண திரையரங்கிற்கு லாஸ்லியா அவர்கள் வந்துள்ளார் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இவரின் முதல் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் வாழ்த்துக்களும் கூறி வருகிறார்கள்.

Leave a Comment