கேரளாவில் சாதனை படைத்த ஆண்டவரின் விக்ரம் திரைப்படம் – முதல் நாள் வசூல் நிலவரம் இதோ.!

நான்கு வருடங்களுக்கு பிறகு உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பின்னி பெடலெடுத்து உள்ள திரைப்படம் தான் விக்ரம். படம் நேற்று உலக அளவில் ரிலீசாகியுள்ளது. கே ஜி எஃப், புஷ்பா, RRR படத்திற்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருந்தது அதேபோல இந்த படத்திற்கும் அதிகரித்திருந்தது காரணம் பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து  இருந்ததே காரணம்.

படமும் எதிர்பார்த்ததை விட மிக சிறப்பாக ஆக்ஷனுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பாக ரசிகர்கள் இந்த படத்தை பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.

கமலின் விக்ரம் திரைப்படம் ஒரு பிரம்மாண்டமான வசூலை படைக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் திரைப்படம் வெளிவந்து ஒரு நாள் ஆன நிலையில் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்த தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.

உலக அளவில் விக்ரம் திரைப்படம் 66 கோடி வசூல் செய்து அசத்தி உள்ளது தமிழகத்தில் மட்டும் 20 லிருந்து 25 வரை வசூல் செய்திருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் கமலின் விக்ரம் திரைப்படம் கேரளாவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தற்போது தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி பார்க்கையில் கேரளாவில் மட்டும் முதல் நாளில்  5 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது வருகின்ற நாட்களில் இதைவிட அதிக வசூல் செய்யும் என்பதே படக்குழுவின் கணிப்பாக இருக்கிறது.

Leave a Comment