ஊரடங்கின் உச்சம் : பிறந்த இரண்டரை மாத குழந்தையை 3 ஆயிரத்துக்கு விற்ற பெற்றோர்.! பரபரப்பு தகவல்

மேற்கு வங்காளத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் இரண்டரை மாத குழந்தையை தொலைதூர உறவினர்களுக்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தக் குழந்தையின் தாய், வீட்டு வேலை செய்து வருபவர் அதேபோல் தந்தை, ஒரு கூலித் தொழிலாளி, நாடு முழுவதும் கொரோனா தோற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதனை மக்களும் கடைபிடித்து வருகிறார்கள், இந்த நிலையில் கடந்த மூன்று மாத காலமாக இந்த தம்பதியினர் வேலை இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

வேலை இல்லாததால் வருமானத்திற்கு வழி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது, அதனால் அவர்களின் வாழ்க்கை முறை மிகவும் மோசமாக மாறியது, இந்த நிலையில் ஹௌராவில் அமைந்துள்ள அவரது தூரத்து சொந்தக்காரர்களுக்கு குழந்தையை விற்றுள்ளர்கள்.

பிறந்து இரண்டரை மாதமே ஆன குழந்தையை மூவாயிரத்துக்கு விடற்றுள்ளார்கள். இந்த தகவலை அறிந்த போலீஸ் மற்றும் சைல்டு லைன் உறுப்பினர்கள் குழந்தையை விற்ற உறவினர்களின் வீட்டில் இருந்து குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்கள்.

மேலும் குழந்தையின் பெற்றோர் பாபம் தாரா மற்றும் தவசி என அடையாளம் கண்டு பிடித்தார்கள், மேலும் நேரில் கண்ட சாட்சியங்களின் வாக்குமூலங்கள் போலீஸார் பதிவு செய்துள்ளார்கள் இந்த தகவல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment