அண்ணாத்த படத்தை விமர்சித்தவர்களை வச்சி செய்த இயக்குனர் பேரரசு – என்ன சொல்லியிருக்கிறார் பாருங்கள்.

முக்கிய பண்டிகை நாட்களில் டாப் நடிகர்கள் படங்கள் வெளி வருவது வழக்கம் அந்த வகையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகிய சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.

இரண்டு நாட்களில் மட்டுமே 100 கோடியை அள்ளிய நிலையில் மேலும் சிறப்பான வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி ஓடிக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளதாக யூடியூப் விமர்சகர்கள் பலரும் கூறுகின்றனர். ஆனால் அண்ணாத்த படக்குழு எதையும் கண்டுகொள்ளாமல் தற்போது வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.

அண்ணாத்த  படம் அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தில் ஒத்துப்போவதாக ஒரு தரப்பு ரசிகர்கள் கூறினார். மேலும் திருப்பாச்சி படத்தில் வரும் காட்சிகள் அப்படியே இருப்பதாக கூறி கிண்டலடித்து உள்ளனர். இதனை பார்த்த திருப்பாச்சி பட இயக்குனர் பேரரசு தனது கருத்துக்களை சென்றுள்ளார் அதில் அவர் கூற வருவது.

சமீப காலமாக வெளிவரும் படங்களை விமர்சனம் என்ற பெயரில் எதிர்மறையாக விமர்சிக்கின்றனர் இதனால் படத்தின் வசூல் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது.  மேலும் ஒரு படம் என்றால் அதில் நிறை குறைகள் இருக்கும் அதை பெரிதாக எடுத்து சொல்வதை விட்டுவிட்டு படத்தை தன்மையைக் குறித்து பேசி இருந்தால் விமர்சனம் சூப்பராக இருக்கும் என விமர்சிப்பவர்களை கடுமையாக சாடியுள்ளார்.

திரைப்படத்தில் நிறை குறைகள் இருக்க செய்யும் அதை தேசத்துரோகி பகிரப்படுவதும், நாகரிக மற்றது சிலர் விமர்சனம் செய்வது வேதனையாக இருக்கிறது சில யூடியூப் சேனல் விமர்சனம் மிகவும் தரம் தாழ்ந்து போய்விட்டது. ரஜினின் அண்ணாத்த படம் வெற்றியை பலரையும் அன்னாந்து பார்க்க வைக்கும் என அவர் கூறியுள்ளார்.

Leave a Comment